முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வி நிலையங்களில் அநீதிக்கு இடமில்லை: ஜனாதிபதி பிரணாப்

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

மும்பை,  கல்வி நிலையங்களில் சகிப்புதன்மையின்மைக்கும் வெறுப்புக்கும் அநீதிக்கும் இடமில்லை என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக அறிவித்தார்.

பிரபல வேளான் விஞ்ஞானி சாமிநாதனுக்கு வரலாற்று சிறப்புமிக்க மும்பை பல்கலைக்கழகத்தில் நேற்று கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. டாக்டர் பட்டத்தை சாமிநாதனுக்கு பிரணாப் முகர்ஜி வழங்கி பேசியதாவது:-

அநீதிக்கு இடமில்லை:

கல்வி நிலையங்களில் சகிப்புத்தன்மையின்மை, வெறுப்பு மற்றும் அநீதிக்கு இடமில்லை. பலதரப்பட்ட கருத்துக்களுக்கு ஒற்றுமை வழிகாட்டியாக கல்விநிலயங்கள் விளங்க வேண்டும். நாட்டை முன்னேற்றம் அடையச்செய்யும் முன்னேற்றத்தில் உயர்கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. குறுகிய மன்பான்மையையும், குறுகிய சிந்தனைகளையும் ஒதுக்கிவிட்டு வெளிப்படையான விவாதங்களையும் கலந்துரையாடல்களையும் கல்வி நிலையங்கள் வளர்த்து பாதுகாக்க வேண்டும். இதை உறுதி செய்யும் வகையில் இந்திய நவீன பல்கலைக்கழகம் இருக்க வேண்டும். உயர் அளவிலான தத்துவங்கள் பற்றி விவாதிப்பதையும் ஆய்வு செய்வதையும் பழங்கால இந்தியா வளர்த்து பாதுகாத்து வந்துள்ளது.

கலந்துரையாடல்:

பலதரப்பட்ட கருத்துக்களும் பண்பாடும் மலரும் நாடாக இந்தியா இருக்கிறது. கலந்துரையாடலும் பேச்சுவார்த்தையும் நமது வாழ்க்கையின் அம்சமாகும். கருத்துக்களை பரிமாற்றம் செய்துகொள்ள பல்கலைக்கழகங்களும் உயர்கல்வி நிலையங்களும் சிறந்த இடமாகும்.

இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.

மும்பை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 160 ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி தபால் தலை வெளியிடப்பட்டது. அதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பெற்றுக்கொண்டார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்