முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவா கவர்னரை நீக்க காங். கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, கடமையில் இருந்து தவறிய கோவா மாநில கவர்னர் மிரிதுலா சின்ஹாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

கோவா மாநிலத்தில் அரசு அமைப்பதற்கு முன்பு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியுடன் கவர்னர் மிரிதுலா சின்ஹா கலந்தாலோசித்ததாக புகார் எழுந்துள்ளது. இதனையொட்டி அரசியல் சட்டத்தை கோவா கவர்னர் சின்ஹா மீறிவிட்டதோடு கடமையில் இருந்தும் தவறிவிட்டார். அதனால் அவரை கவர்னர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவாவில் பாரதிய ஜனதா  அரசு அமைக்க அழைப்பதற்கு முன்பு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியுடன் கலந்தாலோசித்ததாக கவர்னரே ஒப்புக்கொண்டுள்ளார். அதனால் அரசியல் சட்டம் 156 (1)ன் படி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி கவர்னரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் பஜ்வா கூறியுள்ளார். கவர்னர் இவ்வாறு பேசியதன் மூலம் தனக்குள்ள அரசியல்சட்டத்தை அவர் மீறி இருப்பதோடு பதவிப்பிரமாண ரகசிய காப்பு முறையையும் மீறியுள்ளார். இதே காரணத்திற்காக அருணாசலப்பிரதேச மாநில கவர்னரை நீங்கள் டிஸ்மிஸ் செய்துள்ளீர்கள். அதேமாதிரி கோவா கவர்னரையும் நீங்கள் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் பிரதாப் சிங் மேலும் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்