முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயங்கொண்ட பட்டினம் ஊராட்சி இருளர் காலனி பொதுமக்களிடம் குறைகள் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ.கேட்டறிந்தார்

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      விழுப்புரம்

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நேரடியாக சென்று பொது மக்களின் குறைகளை தினமும் கேட்டு அதன் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் குமராட்சி ஒன்றியம் ஜெயங்கொண்டபட்டினம் ஊராட்சியில் உள்ள இருளர் காலனியில் உள்ள இருளர் சமுதாய மக்களிடம் வீடு வீடாக நேரடியாக சென்று சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் மனுக்களை பெற்றார்.அப்போது சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் அப்பகுதி மக்கள் தங்களது மனுக்களில் குடிநீர் தேவைகள், முதியோர் உதவித் தொகைகள், மாற்று திறனாளிகளுக்கான உதவி தொகைகள், கனவனால் கைவிடப் பட்டவர்களுகாக தமிழக அரசால் வழங்கப்படும் உதவித் தொகைகள், குடும்ப அட்டை வேண்டி கோரிக்கைகள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மனுக்களை வழங்கினர். மனுக்களை ஒவ்வொருவரிடம் பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக தீர்த்து வைக்க ஆவன செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் தங்களது கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு கான அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி நடவடிக்கையினை மேற்கொண்டதினை அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாராட்டி நன்றி தெரிவித்துக் கொண்டனர்.ஆய்வின் போது உடன் குமராட்சி ஒன்றிய கழக அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி, பரங்கிப்பேட்டை ஒன்றிய கழக அவைத்தலைவர் கோவி.ராசாங்கம், மாவட்ட பிரதிநிதி செல்வகணபதி, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் முருகையன், மு.ஒன்றிய பொருளாளர் முத்துக்குமரன், ஊராட்சி செயலாளர் இரவி, கிளை செயலலர்கள் ராமர், ஸ்ரீகாந்த், நிர்வாகிகள் கனேஷ், சுந்தரம், கார்த்திகேயன், ஜே.கே.முத்து, மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்