முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கிளாகோமா வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி: வருவாய் அலுவலர் இளங்கோ துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர் சோ. இளங்கோ உலக கிளாகோமா வாரத்தை முன்னிட்டு, கிளாகோமா (கண் நீர் அழுத்த நோய்) விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து, துவக்கி வைத்தார்.உலக கிளாகோமா வார தினத்தை முன்னிட்டு, கிளாகோமா (கண் நீர் அழுத்த நோய்) குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில், நடைபெற்ற பேரணியை கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர் சோ. இளங்கோ கலெக்டர் அலுவலகத்தில் கொயடிசைத்து, துவக்கி வைத்து, பேரணியில் கலந்து கொண்டு, தெரிவித்ததாவது:-கன்னியாகுமரி மாவட்டத்தில், மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச்சங்கத்தின் சார்பாக, உலக கிளாகோமா வாரம் மார்ச் 12 முதல் 18-ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் கண் நீர் அழுத்த நோயிலிருந்து எவ்வாறு கண்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் எனவும், நோயின் அறிகுறிகள் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில், இன்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆசாரிப்பள்ளம், மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவியர்கள், செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவியர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. இதில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகங்களை கையில் ஏந்தியபடி கலந்து கொண்டனர்.இப்பேரணியானது, கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி, ராணி தோட்டம் வழியாக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சென்று நிறைவடைந்தது. ‘கிளாகோமா" என்பது கண் நீர் அழுத்த நோயாகும். இந்த நோயினால், கண் நரம்பு மிகவும் பாதிக்கப்படும். இது பொதுவாக 40 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கும், சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் எளிதில் வர வாய்ப்புள்ளது.கண்ணின் அழுத்தம் 18 - 20 அஅ ர்ப அளவு ஆகும். அந்த அளவை விட கண்ணில் உள்ள அழுத்தம் அதிகமாவதே கண் அழுத்த நோய் ஏற்பட முக்கிய காரணமாகும். மேலும், அழுத்தம் சரியான அளவில் இருந்தால் கூட, ஒருசில பேருக்கு கண் நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை ஆரம்பத்திலேயே குணப்படுத்தாவிட்டால், எந்தவித அறிகுறி இல்லாமல் கண் பார்வை முழுவதுமாக பாதிக்கப்படும்.இந்த நோயின் அறிகுறிகள் கண்ணில் கலர் வளைங்கள், கண்ணில் சிவப்பு, கண்ணில் நீர் வடிதல், கண்ணில் கூச்சம், கண் வலி, கருவிழி சோர்வாக காணப்படும். எனவே, இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உயர்தர பரிசோதனைகளான அபளநேசன் டோனோ மீட்டர், ஆட்டோ மேட்டட் பெரிமீட்டர் மற்றும் ஸ்கேன், உயர்தர அறுவை சிகிச்சைகள் பேக்கோ டிராப் போன்ற சிகிச்சைகள் அரசு மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து மேற்கொண்டு வந்தால், நிச்சயமாக பார்வையிழப்பை தடுத்து விடலாம். இத்தகையான சிகிச்சை நமது கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ கண் பிரிவில் உள்ளது.எனவே, பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொண்டு, தங்களது பார்வையை பாதுகாத்துக் கொள்ளுமாறு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. இரவீந்திரன், மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. இராதாகிருஷ்ணன், மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச்சங்கத்தின் திட்ட மேலாளர் மரு. கோ. திருவேங்கட செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளர் ரீதா மற்றும் அரசு மருத்துவர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்