முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.10 லட்சத்தில் மதிப்பில் ஸ்டெர்லைட் காப்பர்  சார்பில்  ராஜபாளையத்தில்  புதிய அங்கன்வாடி கட்டிடம் 

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      தூத்துக்குடி

 

வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாளமுத்துநகர் பகுதியில் புதிய அங்கன் வாடி கட்டிடம் அமைக்கப்பட்டுவருகிறது. வேதாந்தா குழுமத்தின் சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்கள்தீட்டப்பட்டு, செயல்படுத்தப்பட்டு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாகநந்திகர் எனப்படும் அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டு வருகிறது. பிரதமரின் கனவுதிட்டங்களுள் ஒன்றான இதற்காக வேதாந்தா குழுமம் இந்தியாவின் 12 மாநிலங்களில் இந்த மேம்பாட்டுதிட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.நாடுமுழுவதும் வேதாந்தா குழும நிறுவனமான ஸ்டெர்லைட் காப்பர் சார்பில் 4 ஆயிரம் நந்திகர் அங்கன் வாடிகட்டிடங்கள் கட்டிதரப்பட திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் தாளமுத்துநகர் பகுதியில் உள்ள ராஜபாளையத்தில் நந்திகர்அங்கன் வாடி கட்டிடத்திற்கான பூமிபூஜை நடந்தது. இதற்கு ரிட்ஸ் இதழின் ஆசிரியர் அருணா ஆர்கிருஷ்ணன்தலைமை வகித்தார். ரூ.10 லட்சம் மதிப்பில் இக்கட்டிடம் கட்டி முடிக்கப்படவுள்ளது.இதில் ஸ்டெர்லைட் நிறுவன பொதுமேலாளர்கள் ரிட்டு ஜின்கன், பிரதீப் நாயர், குமரவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.த்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அதிகாரி பாத்திமா, அருட்தந்தை யராஜா, தாளமுத்துநகர் பிரமுகர்கள் அப்பன்ராஜ், அம்பாசங்கர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்