முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச பீச் கபடி போட்டி: இந்திய அணியில் தமிழக வீராங்கனை

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      விளையாட்டு
Image Unavailable

சென்னை - சர்வதேச பீச் கபடி போட்டியில் இந்திய அணியில் தமிழக வீராங்கனை அந்தோணியம்மாள் இடம் பிடித்துள்ளதாக தமிழ்நாடு கபடி சங்க தலைவர் தெரிவித்துள்ளார். முதலாவது ஆசிய பீச் (கடற்கரை) கபடி சாம்பியன்ஷிப் போட்டி மொரிஷியஸ்சில் இன்றும், நாளையும் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் பீச் கபடி அணியை இந்திய அமெச்சூர் கபடி சம்மேளனம் அறிவித்துள்ளது. 6 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழக வீராங்கனை அந்தோணியம்மாள் இடம் பிடித்துள்ளதாக தமிழ்நாடு கபடி சங்க தலைவர் சோலை ராஜா, செயலாளர் சபியுல்லா தெரிவித்தனர். அந்தோணியம்மாள் மதுரை சக்தி டைல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்