முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்த்தூர் கொடிசியா அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டத்திற்கான 8031 வளர்ச்சிப் பணிகளாக ரூ.1313 கோடி மதிப்பீட்டில் துவக்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும், 6200 பயனாளிகளுக்கு ரூ.12.12 கோடி ம

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      கோவை

கோயம்புத்தூர் மாவட்டத்தில், கொடிசியா அரங்கில் காலை நடைபெறும் அரசு விழாவில்  தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி  கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டத்திற்கான 8031 வளர்ச்சிப் பணிகளாக ரூ.1313 கோடி மதிப்பீட்டில் துவக்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும், 6200 பயனாளிகளுக்கு ரூ.12.12 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்பிக்க உள்ளார்கள்.

இவ்விழாவில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 6200 பணிகள் ரூ.1047.56 கோடி மதிப்பிலும், ஈரோடு மாவட்டத்தில் 361 பணிகள் ரூ.108.21 கோடி மதிப்பிலும், திருப்பூர் மாவட்டத்தில் 815பணிகள் ரூ.89.45 கோடி மதிப்பிலும், ஊட்டி மாவட்டத்தில் 229 பணிகள் ரூ.67.98 கோடி மதிப்பிலும் என மொத்தம் 8031 பணிகள், ரூ.1313.2 கோடி மதிப்பில் துவக்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும், சிறப்பிக்க உள்ளார்கள்.

          முன்னதாக, ரூ.20.18 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டடத்தினை திறந்து வைக்கவும் உள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியில்,  தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ,  பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ,  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் ,  சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ,  வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ,  சட்டப்பேரவத்துணைத் தலைவர்  மரியாதைக்குரிய முதன்மை செயலர்கள், பொதுப்பணித்துறை செயலர் , கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்