முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவானிசாகர் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்வு

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      ஈரோடு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான, குன்னூர், கிண்ணக்கொரை, கல்லாறு உள்ளிட்ட பகுதிகளில், கனமழை கொட்டியது. இரண்டு நாட்கள் நீடித்த மழையால், பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம், வினாடிக்கு, 700 கன அடியாக இருந்த வரத்து, நேற்று, 1,671 கன அடியாக அதிகரித்தது. இதனால், 40.24 கன அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று ஒரே நாளில், 1.08 அடி உயர்ந்து, 41.32 கன அடியானது. குடிநீர் தேவைக்காக, பவானி ஆற்றில், 130 கன அடி, கீழ்பவானி வாய்க்காலில் ஐந்து கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு, 2.6 டி.எம்.சி.,யாக உள்ளது. பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago