முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் முஸ்லீம் பெண்கள் அதிக அளவில் பா.ஜ.வுக்கு வாக்களித்துள்ளனர்: மத்திய அமைச்சர் பிரசாத் தகவல்

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

காந்திநகர், மூன்று முறை தலாக் கூறும் விவகாரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்பெண்களில் அதிகமானோர் பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்துள்ளனர் என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 312 தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்தநிலையில் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நேற்று குஜராத் மாநில தலைநகர் காந்தி நகரில் உள்ள குஜராத் சட்ட பல்கலைக்கழக 8-வது பட்டமளிப்பு விழாவில்   அமைச்சர் ரவி சங்கர்   கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முஸ்லீம் பெண்கள்:

உத்திரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலின்போது அங்கு 3 முறை தலாக் சொல்லி விவகாரத்து செய்யப்பட்ட பெண்களில் அதிகமானோர் பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்துள்ளனர். மாநிலத்தில் 3 முறை தலாக் கூறி விவகாரத்து செய்யும் முறையால் அதிக அளவில் முஸ்லீம்பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் இந்த முறையால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிக அளவில் முஸ்லீம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விஷயத்தில் பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி ஆகியோர் அமைதியாக இருப்பது துரதிர்ஷ்டவசமாகும். 3 முறை தலாக் கூறி விவகாரத்து செய்வதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் மத்திய அரசு கடும் வாதத்தை எடுத்துவைத்து வருகிறது. இந்த பிரச்சினை மதசம்பந்தப்பட்ட பிரச்சினை இல்லை. ஆண்களும் பெண்களும் சம அந்தஸ்துடன் இருக்க வேண்டும். இருபாலர்களுக்கும் சமத்துவம் மற்றும் கண்ணியம் சமமாக இருக்க வேண்டும். நாம் இறைவழிபாடு செய்கிறோம். ஆனால் இதில் எந்தவித தீண்டாமைக்கும் இடம் தரக்கூடாது. அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. இறைவழிபாட்டில் தீண்டான்மை என்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகும். பெண்களுக்கு சமத்துவம் இல்லாமையும் அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகும். 20-க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் சிறுபான்மையானவர்களாக உள்ள நாடுகளில் மூன்றுமுறை தலாக் கூறும் முறை குறைக்கப்பட்டுள்ளது. அவைகளில் ஒரு சில நாடுகளில் அடியோடும் ஒழிக்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டப்படி அயோத்தியில் ராமர்கோயில் பெரிய அளவில் கட்டப்படும்.

இவ்வாறு பிரசாத் கூறினார்.

பட்டமளிப்பு விழாவில் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி பினகி சந்திரகோஷ், குஜராத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சுபாஷ் ரெட்டி, மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் பிரதீப் சிங் ஜடேசா ஆகியோரும் கலந்துகொண்டனர்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்