முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிரி சுயஉதவிகுழுவினருக்கு திருச்சிஅரங்கநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 46 பசுக்கள் : அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் , வளர்மதி வழங்கினர்

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      திருச்சி
Image Unavailable

திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டையில் உள்ள அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான கோசாலையில் உள்ள 46 பசுக்களை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு விலையில்லாமல், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சீ.வளர்மதி ஆகியோர் நேற்று (18.03.2017) வழங்கினார்கள். இக்கோயிலுக்கு பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்படும் கால்நடைகள் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி கோயில் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

 

விலையில்லா பசுமாடுகள்

 

இந்நிகழ்ச்சியில் பாரளுமன்ற உறுப்பினர் ப.குமார் முன்னிலை வகித்தார். ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயில், வைணவத் தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுந்தம் எனவும், பதினோரு ஆழ்வார் மகான்களால் மங்களாசானம் செய்யப்பட்ட தலமாகும். இத்திருக்கோயில் வளாகத்திலுள்ள திருக்கொட்டார கோசாலையிலும், கம்பரசம்பேட்டை ஒருங்கிணைந்த கோசாலையிலும், பக்தர்களால் காணிக்கையாக பெறப்படும் கால்நடைகளை பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் திருச்சி மண்டலத்திலுள்ள திருக்கோயில்களில் பராமரிக்க இயலாத நிலையில் உள்ள கால்நடைகளை ஒருங்கிணைந்த கோசாலையில் பெறப்பட்டு திருக்கோயில் மூலமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வரப்பெறும் கால்நடைகளில், திருக்கோயில் பயன்பாட்டிற்கு உள்ள கால்நடைகளை தவிர்த்து, ஏனைய உபரி கால்நடைகளை மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பொருளாதார ரீதியாக மேம்பாடு அடையும் வகையில் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட கால்நடைகளை விலையில்லாமல் அங்கீகரிக்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்க அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இதுவரை 363 பசுக்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி நேற்று (18.03.2017) கம்பரசம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலா ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 46 கால்நடைகளை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சீ.வளர்மதி ஆகியோர் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கினார்கள்.

இவ்விழாவில் முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர்கள் அழகேசன், எஸ்.பி.முத்துகருப்பன், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ஐயப்பன், விஜி, மகாலெட்சுமி, உதவி மகளிர் திட்ட அலுவலர் காமராஜ், ஸ்ரீரங்க கோவில் உதவி ஆணையர் ரத்தினவேல், கண்காணிப்பாளர் எம்.எஸ்.ஆறுமுகம் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago