முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வி மட்டுமே சீரான சமுதாயத்தை உருவாக்க முடியும் கலெக்டர் கோவிந்தராஜ் பேச்சு

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்டம், நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டுவிழாவில் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கி 3 பருவத்திலும் தரப்பட்டியலில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

 

உலகளாவிய அறிவு

 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:

தமிழக அரசு கல்விக்காக அனைத்து திட்டங்களையுமே விலையில்லாமல் வழங்கி தேர்ச்சி விழுக்காட்டில் மட்டுமல்லாமல் மதிப்பெண் விழுக்காட்டிலும் 100 சதவீதத்தை நிறைவு செய்யக்கூடிய வகையில் குக்கிராமங்களில் பயிலும் மாணவ, மாணவியர்கூட உலகளாவிய அறிவை பெற வேண்டும் என்ற அடிப்படையில் மடிக்கணினி உள்ளிட்ட அனைத்தையுமே விலையில்லாமல் வழங்கி கல்வியில் சிறந்த மாநிலமாக உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த நல்ல தருணத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும் மாணவ, மாணவியர்களுக்கு சிறந்த கல்வியையும், நல்ல நீதி, போதனைகளையும் வழங்க வேண்டும். தொடக்க கல்வி சிறப்பாக அமைந்தால்தான் தொடர்கல்விகளும் சிறப்பாக அமையும். இந்த உன்னத எண்ணத்தை அடிப்படையாக கொண்டு ஆசிரியர்கள் அறப்பணியினை செம்மையாக செய்ய வேண்டும். கல்வி ஒன்றால் மட்டுமே பாகுபாடற்ற சீரான சமுதாயத்தை உருவாக்க இயலும். புதிய தொழில்நுட்பங்கள், கற்றல், கற்பித்தல் முறைகள் ஆகிய யுக்திகளை கையாண்டு சிறந்த சமுதாயம் அமைய நல்ல மாணவ, மாணவிகளை உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் விஜயலலிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago