பழவேற்காட்டில் பள்ளி மாணவர்கள் மற்றும் கிராமத்தினர் சேர்ந்து சீமை கருவேலஞ்செடிகளை அகற்றம்

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      சென்னை
Ponneri 2017 03 18

பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் மிகப் பழமை வாய்ந்த விஜயநகரப் பேரரசால் அமைக்கப்பட்ட ஆதிநாராயணப் பெருமாள் கோயில் இருக்கின்றது.இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் புணரமைப்பு பணிகள் துவங்கப்பட்டன.ஆனால் அதன் பழமை மாறாமல் புணரமைப்பு பணிகள் செய்யவேண்டும் எனக்கூறி தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

புணரமைப்பு பணிகள்

இந்த காலகட்டத்தில் கோயிலினைச் சுற்றிலும் வேலிகாத்தான் எனப்படும் சீமைக்கருவேலஞ்செடிகள் மிக விரைவாக வளர்ந்துவிட்டன.இதனால் அப்பகுதி மக்கள் கோயிலுக்குள் செல்லமுடியாமல் வருந்தினர்.இதனால் அந்த கிராமத்தினர் முள்புதர்களையும்,சீமைக்கருவேலஞ்செடிகளையும் அகற்ற முடிவு செய்தனர்.அவர்களோடு அருள்ஜோதி குருகுல பாடசாலை மாணாக்கர்களும் இணைந்து சுத்தம் செய்து அகற்றி அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதற்கான துவக்க நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவச்சங்க தலைவர் எத்திராஜ்,பழவை ஸ்ரீகாளிகாம்பாள் கோயில் அறங்காவலர் பழனியப்பன்,பழவேற்காடு கிராம வளச்சி சங்க நிர்வாகிகள் சம்பத்,விஸ்வநாதன்,அருள்ஜோதி பள்ளி ஆசிரியர்கள் ஆர்.பி.எஸ்.செந்தில்குமார்,ஆறுமுகம்,ஜெயபிரகாஷ்,அஷோக்,பள்ளி பணியாளர்கள்,தன்னார்வலர்கள் உசேன்,ஆபிரகாம்,கோபால் மற்றும் சுமார் ஐம்பதிற்க்கும் மேற்பட்ட அருள்ஜோதி குருகுல பள்ளி மாணாக்கர்கள் இதில் கலந்துக்கொண்டனர்.


 

இதை ஷேர் செய்திடுங்கள்: