முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் உளவுத்துறையின் பிடியில் காணாமல் போன இந்திய மதகுருக்கள்

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் காணாமல் போன இந்திய முஸ்லிம் மதகுருக்கள் இருவரும் அந்நாட்டு உளவுத்துறையின் கட்டுப்பாட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைமை மதகுரு

புது டெல்லியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஹஸ்ரத் நிஜாமுதீன் தர்காவின் தலைமை மதகுரு சையத் ஆசிப் நிஸாமி மற்றும் அவரது மருமகன் நஸிம் நிஸாமி இருவரும் லாகூரில் அமைந்துள்ள டாட்டா தர்பார் தர்காவுக்கு செல்வதற்காக கடந்த மார்ச் 8-ம் தேதியன்று பாகிஸ்தானுக்கு சென்றனர். ஆனால்,பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் இறங்கிய இருவரும் திடீரென மாயமாகினர்.இருவரைப் பற்றிய எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

சுஷ்மா வலியுறுத்தல்

இதையடுத்து, பாகிஸ்தானில் காணாமல் போன இந்திய மதகுருக்கள் இருவரைப் பற்றியும் தகவல் அளிக்குமாறு பாகிஸ்தான் அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். சுஷ்மாவின் கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவின் கோரிக்கை கடிதம் வந்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறைகளிடம் இது குறித்து விசாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாயமானதாக கூறப்படும் இருவரைப்பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என கூறியது.

உளவுத்துறை பிடியில்...

இந்நிலையில், இந்திய மதகுருக்கள் இருவரும் பாகிஸ்தானில் உள்ள தடை செய்யப்பட்ட இடதுசாரி இயக்கமான முத்தாகிதா குவாமி கட்சிப் பிரமுகர்களிடம் மறைமுக தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அந்நாட்டு உளவுத்துறையினரின் கட்டுப்பாட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தடை செய்யப்பட்ட இயக்கத்தினருக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பு இல்லை எனவே, அவர்களை பாகிஸ்தான் உளவுத்துறை விடுவிக்கவேண்டும் என டெல்லியில் வசிக்கும் ஆசிப் நிஸாமியின் மகன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்