முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவாவில் பா.ஜ.க அரசு கவிழாது: முதல்வர் பாரிக்கர் நம்பிக்கை

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

பனாஜி : கோவாவில் பா.ஜ.க அரசு கவிழாது என்று முதல்வர்  பாரிக்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

கோவா பார்வர்டு, மகாராஷ் டிரவாடி கோமந்தக் கட்சி  மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் கோவா வில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக உருவான காங்கிரஸ், பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் புதிய முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவியேற்பதற்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தது. மேலும் வியாழக்கிழமை சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து கோவா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் மனோகர் பாரிக்கர் அரசு வெற்றி பெற்றது. இந்நிலையில் பாஜக அரசு தொடர்ந்து 5 ஆண்டுகள் நீடிக்கும் என முதல்வர் மனோகர் பாரிக்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் களிடம் நேற்று அவர் கூறுயபோது, ‘‘பாஜக அரசு 5 ஆண்டுகள் முழு பதவி காலத்தையும் நிறைவு செய்யும். கூட்டணி கட்சிகளின் பொதுவான செயல்திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப் படும். எனவே ஆட்சி கவிழும் என்ற பேச்சுக்கே இடமில்லை’’ என்றார்.  இதற்கிடையே சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காத காங்கிரஸ் எம்.எல்.ஏ விஸ்வஜித் ரானே திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக கோவா சட்டப் பேரவையில் காங்கிரஸ் பலம் 16 ஆக குறைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்