முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செஞ்சி அருகே விவசாயி முருகன் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ 3 லட்சம் நிவாரண உதவி அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      விழுப்புரம்
Image Unavailable

பயிர் கருகிபோனதால் மனம் உடைந்து மாரடைப்பால் இறந்த விவசாயி முருகன் குடும்பத்திற்கு தமிழக அரசின் சாா்பில் நிவாரண உதவி தொகை ரூ 3 லட்சத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் வெள்ளி அன்று அக்குடும்பதினரிடம் நேரில் வழங்கினார்.செஞ்சி வட்டம் கணக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பாவாடை மகன் முருகன் (50) இவருடைய 2 ஏக்கர் நிலத்தில் நெற்பயிர் செய்து வந்தார். பருவமழை இல்லாததால் கிணற்றின் நீர் மட்டம் குறைந்து, போதிய தண்ணீர்இன்றி நெற்பயிர்கள் காய்ந்துவிட்டது. இதனால் மனவேதனையில் இருந்த முருகன் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் கடந்த ஐனவரி-4ம்தேதி அன்று இறந்து விட்டார். இதனை தொடர்ந்து தமிழக அரசு நிவாரண உதவி தொகையாக ரூ 3 லட்சம் இறந்த முருகனின் குடும்பத்திற்கு வழங்க உத்தரவு இட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர் சி.வி.சண்முகம் கணக்கன்குப்பம் கிராமத்தில் உள்ள முருகனின் இல்லத்திற்கு சென்று அவரது மனைவியிடம் காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார்.இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் ராஜசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி வெ.ஏழுமலை, அதிமுக ஒன்றிய செயலர்கள் செஞ்சி அ,கோவிந்தசாமி, வல்லம் கு.விநாயகமூர்த்தி, மேல்மலையனூர் ஆர்.புண்ணியமூர்த்தி, கன்னலம் பாலகிருஷ்ணன், செஞ்சி ஆர்.சரவணன், ஜெ.கமலக்கண்ணன், ஆர்.அனுகுமார், மணி்மாறன், லட்சுமிகாந்தன், சோழன், மனோகரன், ராஜாராம், மாவட்ட மருத்துவ அணி செயலர் ராமச்சந்திரன், மகளிர் அணி மல்லிகாகுமார், பொதுக்குழு உறுப்பினர் சுலோச்சனா கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்