முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன்கோவிலில் மனைவிக்கு வரதட்சணை கொடுமை. கணவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      திருநெல்வேலி

சங்கரன்கோவிலில் மனைவிக்கு வரதட்சணை கொடுமை செய்த கணவருக்கு 2ஆண்டுகளும், அவரது பெற்றோர்களுக்கு ஒரு ஆண்டும் சிறைத்தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.சங்கரன்கோவில் அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்த அந்தோணி (55), அமலாற்பவம் (53), தம்பதியரின் மகன் சூசைஜெயக்குமார் தாஸ் (35).இவருக்கும் சிவகிரி தாலுகா துரைச்சாமியாபுரத்தை சேர்ந்த மேரிஜோன்~கிலா (30) என்பவருக்கும் கடந்த 16.09.2005ல் திருமணம் நடைபெற்றது. மேரி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வருகிறார்.இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சூசை தன் பெற்றோருடன் சேர்ந்;து மேரியை கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த மேரி 15.07.2009 அன்று சங்கரன்கோவில் மகளிர் காவல்நிலையத்தில் மேரி தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி புகார் அளித்துள்ளார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கு சங்கரன்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ராபின்சன்ஜார்ஜ் சூசை ஜெயக்குமார் தாஸ்க்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். அதே போல் அவரது பெற்றோருக்கு தலா ஒரு வருடம் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்;ப்பளித்தார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்