முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருநெல்வேலி மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகள் நடைபெறும் குளங்கள் செய்தியாளர்களுடன் சென்று கலெக்டர் மு.கருணாகரன் ஆய்வு

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      திருநெல்வேலி
Image Unavailable

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பின் மூலம் குடிமராமத்துப் பணிகள் நடைபெறும் குளங்களை கலெக்டர் மு.கருணாகரன் செய்தியாளர்களுடன்நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டம், செங்கோட்டை அருகில் உள்ள பரமனேரி குளத்தில் சீமை கருவேல மரங்களை வேருடன் அகற்றுதல், மடை பழுதுபார்த்தல், கரைப்பலப்படுத்துதல், கால்வாய் தூர்வாருதல், வெள்ள தடுப்புச்சுவர் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.6.50 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்கள். தொடர்ந்து, பண்பொழி பெரியகுளத்தில் ரூ.5 இலட்சம் மதிப்பிலும், கீழப்பூலியூர் குளம் ரூ.5 இலட்சம் மதிப்பிலும், ஆலங்குளம் வட்டம், மாறாந்தை பெரிய குளத்தில் ரூ.5 இலட்சம் மதிப்பிலும், வாகைகுளத்தில் ரூ.5 இலட்சம் மதிப்பிலும் சீமை கருவேல மரங்கள் வேருடன் அகற்றுதல், கால்வாய் தூர்வாருதல், கரைப்பலப்படுத்துதல், வெள்ள தடுப்புச்சுவர் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் மு.கருணாகரன் செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.பின்னர் கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது-தமிழகம் முழுவதும் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் நீர்வள ஆதார அமைப்பின் மூலம் குடிமராமத்து பணிகள் செய்திட ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 13.03.2017 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இப்பணிகளை தமிழகம் முழுவதும் தொடங்கி வைத்தார்கள். அன்றைய தினமே நமது மாவட்டத்திலும் இப்பணிகள் தொடங்கப்பட்டது. எதிர்வரும் கார்பருவ சாகுபடிக்கு தயாராகும் வகையில், தென்காசி, சிற்றாறு வடிநிலக் கோட்டப் பகுதியில் 85 குடிமராமத்துப் பணிகள் ரூ.5 கோடி மதிப்பிலும், திருநெல்வேலி தாமிரபரணி வடிநிலக் கோட்டப் பகுதியில் 16 குடிமராமத்துப் பணிகள் ரூ.1.14 கோடி மதிப்பிலும் மொத்தம் 101 குடிமராமத்துப் பணிகள் ரூ.6 கோடியே 14 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதில், குளக்கரைகளை பலப்படுத்துதல், சீமை கருவேல மரங்கள் வேருடன் அகற்றுதல், மடை பழுதுபார்த்தல், வரத்து கால்வாய்களை தூர்வாருதல், தடுப்புச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் விவசாயிகளின் உதவியுடன் நடைபெற்று வருகிறது. குளங்களில் உள்ள அமலைச் செடிகளும் அகற்றப்பட்டு வருகிறது. இப்பணிகள் விவசாயிகளுக்கு மிகவும் திருப்தியளிக்க கூடிய வகையில் உள்ளது. இதன்மூலம் தண்ணீர் கூடுதலாக தேக்கிவைக்கப்பட்டு, விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி முகமை, தாய் திட்டத்தின் மூலம் 48 குளங்கள் தூர்வாரி சீர்செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கலெக்டர் மு.கருணாகரன் தெரிவித்தார்கள்.ஆய்வின்போது, தென்காசி வருவாய் கோட்டாட்சித் தலைவர் வெங்கடேஷ், பொதுப்பணித் துறை சிற்றாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் ஆர்.காளிராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) மகாகிருஷ்ணன், சிற்றாறு வடிநிலக் கோட்ட உதவி செயற்பொறியாளர்கள் மதனசுதாகரன், மாரியப்பன், உதவி பொறியாளர்கள் பாலசுப்பிரமணி, சுப்பிரமணிய பாண்டியன், சண்முகவேல், சகாயஇளங்கோ, தென்காசி வட்டாட்சியர் அனிதா, மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்