முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம்

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      தூத்துக்குடி
Image Unavailable

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் அறிவியல் மற்றும் கலையியல் துறை சார்பாக தேசிய அளவிலான கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி; முதல்வர் சண்முகவேல் தலைமை தாங்கினார். அறிவியல் மற்றும்; கலையியல் துறை தலைவர் நீலகண்டன் முன்னிலை வகித்தார். எஸ். அன்புகுமார்இ கோயம்புத்தூர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இவ்விழாவிற்கு வருகை தந்தோரை முதலாமாண்டு இயந்திரவியல் மாணவர் ஹரிகிருஷ்ணன் வரவேற்றார். முதலாமாண்டு இயந்திரவியல் மாணவர் ஜெப்ரின் ஜோன்ஸ் இக்கருத்தரங்கத்தின் நோக்கத்தினைப் பற்றி எடுத்துறைத்தார். முதலாமாண்டு மின்னனுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறைமாணவி ப்ரீதா சிறப்பு விருந்தினரை அவையோருக்கு அறிமுகப்படுத்தினார். முதல்வர் தமது சிறப்புரையில் மாணவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் தங்கள் திறன்கள் மற்றும் படைப்பாற்றலை வளர்த்து கொள்ள முடியும் என்றும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றோர் அனைவரையும் வாழ்த்தி அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் திறமைகளை வெளிப்படுத்துமாறும் தெரிவித்தார். சிறப்பு விருந்தினர் தமது தலைமை உரையில் "பொறியாளர்கள் தான் இவ்வுலகைப் படைப்பவர்கள்" என்று கூறினார். மேலும் மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் மற்ற அனைத்து செயல்பாடுகளிலும் தனது தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளுமாறு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அறிவியல் மற்றும்; கலையியல் துறை சார்பாக செய்திமடல் வெளியிடப்பட்டது. இதன் முதல் பிரதியை கல்லூரியின் முதல்வர் வெளியிட சிறப்பு விருந்தினர் பெற்றுக்கொண்டார்.துவக்க விழாவினைத் தொடர்ந்து பல்வேறு கல்லூரிகளிலிருந்து கலந்து கொண்ட மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிஇ போட்டிஇ உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.ஒட்டு மொத்த சாம்பியன்சிப்பை நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி மாணவர்கள் தட்டிச் சென்றனர். மாநில அளவிலான இக்கருத்தரங்கங்கத்தில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த 20 பொறியியல் கல்லூரிகளிலிருந்து 300 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.முதலாமாண்டு இயந்திரவியல் மாணவர் நிதிஷ் பால் நன்றியுரையாற்றினார்.இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் இயக்குநர்இ; கல்லூரி முதல்வர் மற்றும் அறிவியல் மற்றும்; கலையியல் துறை தலைவர் ஆகியோரது வழிகாட்டுதலின் பெயரில் ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் பகவதிஇ அன்னலட்சுமிஇ தம்பா மற்றும் லெனின்; மற்றும் துறை பேராசிரியர்கள்; மற்றும் மாணவர்கள் முனைப்புடன் செய்திருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்