முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாத்தில் பரிதாபம் : ஆம்புலன்ஸ் மீது ரயில் மோதி 5 பேர் பலி

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா அருகே ஆம்புலன்ஸ் மீது ரயில் மோதிய விபத்தில் நிறைமாத கர்ப்பிணி உள்பட 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் மன்னக்கோட்டை அருகேயுள்ள செல்லக்கெரேவை சேர்ந்தவர் கங்கம்மா (30). நிறை மாத கர்ப்பிணியான இவருக்கு  பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து தனது தாய் கதிரம்மா (57) மற்றும் உறவினர்களுடன் ஆம்புலன்ஸ் மூலம் தலக்கா அரசு மருத்துவ மனைக்கு சென்றார். இரவு 8 மணியளவில் மன்னக்கோட்டை அருகே ஆள் இல்லாத ரயில்வே கேட்டை ஆம்புலன்ஸ் கடந்த போது, ஹொசப்பேட்டையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற பயணிகள் ரயில் வேகமாக மோதியது.

இதில் ஆம்புலன்ஸ் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசியெறிப் பட்டதில், நிறைமாத கர்ப்பிணியான கங்கம்மா (30), கதிரம்மா (57), லட்சுமக்கா (45), சந்திரகலா (28) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸின் ஓட்டுநர் சிவா (32) உயிரிழந்தார்.

விபத்து தொடர்பாக சித்ரதுர்கா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட துணை எஸ்.பி. பரசுராம் கூறும்போது, ‘‘விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். முதல் கட்ட விசாரணையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் அலட்சியம் காரணமாகவே விபத்து நடந்திருப்பது தெரியவந்துள்ளது’’ என்றார்.

இதற்கிடையே, ஆவேச மடைந்த உறவினர்கள் சித்ரதுர்கா மருத்துவமனை முன்பாக திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக அங்கு வந்த துணை எஸ்.பி. பரசுராம் அவர்களை சமாதானப்படுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago