முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக திரிவேந்திரசிங் ராவத் பதவி ஏற்றார்

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தின் 8-வது முதல்வராக திரிவேந்திரசிங் ராவத் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் கே.கே.பால் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாரதீய ஜனதா தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அபார வெற்றி

நடைபெற்று முடிந்த உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, பாரதீய ஜனதா கட்சி அபார வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 70 இடங்களில் அந்தக்கட்சி 57 இடங்களை வென்று, ஆட்சியை கைப்பற்றியது.அங்கு முதல்வர் பதவிக்கு 3 முன்னாள் முதல்வர்கள் உள்பட 6 பேர் கடும் போட்டியில் இறங்கினர். அவர்களில் முன்னாள் மத்திய அமைச்சர் சத்பால் மகாராஜ், பிரகாஷ் பந்த் உள்ளிட்டவர்கள் அடங்குவர்.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

இந்த நிலையில் சட்டசபை கட்சி தலைவரை (முதல்வர்) தேர்ந்தெடுப்பதற்கான பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், டேராடூனில் உள்ள ஓட்டலில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மத்திய பார்வையாளராக நரேந்திர சிங் தோமர் கலந்துகொண்டார்.

ஒருமனதாக தேர்வு

முதல்வர் பதவிக்கு திரிவேந்திரசிங் ராவத் (வயது 56) பெயரை பிரகாஷ் பந்தும், சத்பால் மகராஜூம் முன்மொழிந்தனர். மற்றவர்கள் வழிமொழிந்தனர். அதைத் தொடர்ந்து முதல்வராக திரிவேந்திர சிங் ராவத், ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்த உடன் கவர்னர் கே.கே.பாலை தலைவர்கள் சந்தித்து, முதல்வராக திரிவேந்திரசிங் ராவத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அவரை அரசு அமைக்குமாறு கவர்னர் கே.கே.பால் அழைப்பு விடுத்தார்.

பிரதமர் பங்கேற்பு

இந்நிலையில் டேராடூன் அணிவகுப்பு மைதானத்தில் திரிவேந்திரசிங் ராவத்திற்கு கவர்னர் கே.கே.பால் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். அதே போல் அமைச்சர்களுக்கும் கவர்னர் கே.கே.பால் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாரதீய ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் 8-வது முதல்வராக திரிவேந்திரசிங் ராவத் பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்