முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள்: கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் வழங்கினார்

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      கன்னியாகுமரி
Image Unavailable

 

கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் .அ. விஜயகுமார் எம்.பி முன்னிலையில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களை, கலெக்டர் அலுவலக வளாக மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் வழங்கினார். அனைவருக்கும் கல்வி இயக்கம், கன்னியாகுமரி மாவட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கான உள்ளடங்கிய கல்வி திட்டத்தின் கீழ், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு 2016 - 2017 ம் ஆண்டிற்கான அலிம்கோ ( உதவி உபகரணங்கள் - ரூ. 4500 மதிப்புள்ள 51 பல்நோக்கு நுண்ணறிவு சார் பயிற்சி உபகரணங்களும், ரூ.900 மதிப்புள்ள 17 நடைபயிற்சி உபகரணங்கள் மற்றும் ரூ. 3,500 மதிப்புள்ள இரு சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில், கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயகுமார் அவர்களின் முன்னிலையில், முதல் கட்டமாக அகஸ்தீஸ்வரம், தோவாளை, மற்றும் இராஜாக்கமங்கலம் வட்டார வளமையத்திற்குட்பட்ட 17 பயனாளிகளில் ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு பயிற்சி பெற 12 பல்நோக்கு நுண்ணறிவு சார் பயிற்சி உபகரணங்கள் மற்றும் 2 நடைபயிற்சி உபகரணங்களை வழங்கி தெரிவித்ததாவது:-நமது மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக, பல்வேறு அரசு திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பல்நோக்கு நுண்ணறிவு சார் பயிற்சி உபகரணங்கள், நடைபயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், முதல் கட்டமாக இன்று 12 பல்நோக்கு நுண்ணறிவு சார் பயிற்சி உபகரணங்கள் மற்றும் 2 நடைபயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும், குருந்தன்கோடு வட்டார வளமையத்தில் 12 குழந்தைகளுக்கும், தக்கலை வட்டார வளமையத்தில் 9 குழந்தைகளுக்கும், திருவட்டார் வட்டார வளமையத்தில் 6 குழந்தைகளுக்கும், மேல்புறம் வட்டார வளமையத்தில் 11 குழந்தைகளுக்கும், கிள்ளிய+ர் வட்டார வளமையத்தில் 10 குழந்தைகளுக்கும், முஞ்சிறை வட்டார வளமையத்தில் 5 குழந்தைகளுக்கும், அந்தந்த வட்டார வளமையங்களில் வைத்து வழங்கப்படவுள்ளது என தெரிவித்தார். பின்னர், 2015-16-ம் கல்வியாண்டில் நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில், ஓரல் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி மாநில அளவில்; முதல் மற்றும் மூன்றாம் இடம் பிடித்தது. முதல் பரிசை தமிழ்நாடு முதலமைச்சர் திருக்கரங்களால் வழங்கப்பட்டது. தற்போது, மூன்றாம் இடம் பிடித்த அஸ்வின்குமார் என்ற மாணவனுக்கு ஊக்கத்தொகையாக ரூ.20 ஆயிரத்திற்கான காசோலையினையும், பாராட்டுச் சான்றிதழ்களையும், எம்.பி.அ. விஜயகுமார் முன்னிலையில், கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் இ.ஆ.ப., வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், உதவி திட்ட அலுவலர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) வில்வம், நாஞ்சில் சந்திரன், கனகராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்