முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடப்பாடி தொகுதியில் புதியதாக பாலிடெக்னிக் கல்லூரி, தொழிற்பேட்டை விரைவில் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்:முதல்வர் எடப்பாடி.கே.பழனிசாமி உறுதி

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      சேலம்
Image Unavailable

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் கோவையில் அரசு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு தனது சொந்த தொகுதியான இடைப்பாடி தொகுதிக்கு வருகை புரிவதற்காக கோவையிலிருந்து வருகின்ற வழியில் குமாரப்பாளையம், பள்ளக்கபாளையம், சங்ககிரி, கொங்கனாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பொதுமக்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது வழிநெடுகிலும், பெண்களும் ஆண்களும் திரளாக நின்று வரவேற்றத்தோடு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தார்கள். கொங்கணாபுரம் வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் பேசும் போது, இடைப்பாடி தொகுதிக்குட்பட்ட இடைப்பாடி ஊராட்சி ஒன்றியம், இடைப்பாடி நகராட்சி, கொங்கனாபுரம் ஊராட்சி ஒன்றியம், கொங்கனாபுரம் பேரூராட்சி ஆகிய பகுதிகளை உள்ளடக்கி புதிதாக ஒரு பாலிடெக்னிக் கல்லூரி துவக்கப்படும். கொங்குனாபுரம் பகுதியிலுள்ள எட்டிகுட்டமேட்டில் தொழிற்பேட்டை விரைவில் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்ததோடு, பொதுமக்களின் அனைத்து அத்தியாவசிய அடிப்படை தேவைகளையும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாசியோடு நிறைவேற்றி தரப்படும் என தெரிவித்தார். முன்னதாக இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் அவர்கள் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 2015-16ம் ஆண்டிற்கான கூட்டுறவு வளர்ச்சி நிதி, கல்விநிதிக்ளுக்கான தொகை ரூ.88.44 இலட்சத்திற்கான காசோலையினை, அம்மாபேட்டை நகர கூட்டுறவு கடன் சங்க வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிதி ரூ.9.54 லட்சத்திற்கான காசோலையினை சேலம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் வெங்கடாசலம் அவர்களிடம் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் சேலம் கலெக்டர் வா.சம்பத், இ.ஆ.ப., அவர்கள், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் அவர்கள், மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் அ.க.சிவமலர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ராஜேந்திரபிரசாத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கே.கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து தமிழக முதல்வரை சொந்த தொகுதியில் வரவேற்பு அளிக்கும் வகையில் இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் வழி நெடுகிலும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். கூட்டம் மிகுதியின் காரணமாக தமிழக அவர்கள் அடுத்த நிகழ்ச்சி நடைபெறும் இடமான எடப்பாடி பேருந்து நிலையத்திற்கு எடப்பாடி கேட்டு கடையிலிருந்து சுமார் 3 கிலோமீட்டம் தூரம் முன்பாகவே தனது வாகனத்திலிருந்து இறங்கி நடந்து வந்து பொதுமக்களின் அமோக வரவேற்பினை பெற்றுக் கொண்டார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்