முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியின் அணுகுமுறையும் கடின உழைப்பும் என்னை கவர்ந்தது: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி புகழாரம்

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

மும்பை, பிரதமர் மோடியின் அணுகுமுறையும் கடின உழைப்பும் என்னை கவர்ந்தது என்று ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பாராட்டு தெரிவித்தார்.

பட்டமளிப்பு விழா

மும்பையில் நடந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசுகையில் கூறியதாவது:-

பிரதமர் மோடியின் அணுகுமுறை அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. அவரது ஆற்றலும், கடினமான உழைக்கும் திறமையும் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் வெற்றிக்குப்பிறகு பேசிய பிரதமர் மோடி கட்சியினர் அனைவரும் பணிவுடன் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது இந்த பேச்சு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

பாராட்டுகள்

பிரச்சினைகளை கையாள்வதிலும் மோடி தனக்கென தனி பாணியை கடைப்பிடித்து வருகிறார். இதற்கு முன்பு பிரதமராக இருந்தவர்களில் பலரும் பாராளுமன்றத்தில் மிகுந்த அனுபவமிக்கவர்களாக இருந்தனர். ஆனால் குஜராத்தில் முதல்வராக இருந்து நேரடியாக மத்திய அரசுக்கு வந்த மோடி சிக்கலான வெளியுறவு விவகாரம், பொருளாதார வி‌ஷயங்கள் ஆகியவற்றை மிக விரைவாக கற்றுக்கொண்டு அதில் நிபுணத்துவம் பெற்றவராகி விட்டார். இதற்காக அவருக்குப்பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறந்த நண்பர்

பொருளாதாரத்துறையில் சிறந்த அறிஞரான மன்மோகன் சிங்கிடம் இருந்து நான் அதிக வி‌ஷயங்களை கற்றுக்கொண்டேன். எனது சிறந்த நண்பராகவும் அமைச்சரவை சகாவாகவும் நீண்ட நாட்கள் மன்மோகன்சிங் இருந்தார்.

இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago