முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் ரூ. 29 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள்: அமைச்சர் கே.பி. அன்பழகன் துவக்கி வைத்தார்

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      தர்மபுரி
Image Unavailable

 

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பெரியாம்பட்டியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 87 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சாதி சான்றிதழ்களும், தண்டுகாரனஅள்ளி ஊராட்சியில் மாவட்;ட கலால் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் கள்ளச்சாரயத் தொழிலில் ஈடுபட்டு பின் மனம் திருந்தி வாழ்வோருக்கு மறுவாழ்வு உதவியாக 11 பயனாளிகளுக்கு ரூ. 3 இலட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் கறவை பசுக்களும் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 26 இலட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளையும் மாவட்ட கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் நேற்று (18.03.2017) துவக்கி வைத்தார். பின்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் பல்வேறு திட்டப்பணிகளை திறந்து வைத்து தெரிவித்ததாவது :-நமது மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வித் திட்டம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கேத்தனஅள்ளி ஊராட்சி நரியனஅள்ளியில் பள்ளிக் கல்விக் கட்டிடம் ரூ. 6.18 இலட்சம் மதிப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாலக்கோடு வட்டத்தில் பஞ்சப்பள்ளி ஊராட்சி ஒட்டர்திண்ணை கிராமத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ரூ. 11 இலட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கூடிய கட்டிடத்தை திறந்து வைத்தார். அதனைத்தொடர்;ந்து காரிமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட 1.50 இலட்சம்; லிட்டர் கொள்ளளவு நீர்த்தேக்கத்தொட்டியில் தென்பெண்ணை ஆற்றிலிருந்து நேரடியாக தண்ணீரை பெற்று காரிமங்கலத்துக்குட்பட்ட அனைத்து பகுதி பொதுமக்களின் தண்ணீர் பஞ்சத்தை போக்குவதற்கு போர்க்கால நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் காரிமங்கலத்தில் 3 நீர்த்தேக்க மோட்டாhர் பம்ப் பழுது அடைந்த காரணத்தினால் காரிமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட தொட்டிகளிலிருந்து 3 நீர்த்தேக்க தொட்டிகளுக்கும் ஒவ்வொரு உயர்மட்ட நீர்த்தேக்க தொட்டிகள் 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீரினை உடனடியாக நிரப்புவதற்கும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மற்றும் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் பெண்களுக்கு சுய தொழில் உருவாக்கும் நோக்கத்தோடு முற்கட்டமாக பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளியில் ரூ. 9 இலட்சம் மதிப்பில் 36 தையல் இயந்திரங்களை 36 பெண்களுக்கு மகளிர் தொழில் முனைவோர்களுக்கான ஆயத்த ஆடை நிறுவனத்தை தொடங்கி வைத்தார்.

தொழில் குழுக்கள் மூலம் தையற் பயிற்சியினை முடித்து அவர்களின் கைத்தொழிலுக்கான திருப்பூர் மற்றும் கரூர் பகுதிகளிலிருந்து துணி தைப்பதற்கான ஒப்பந்தத்தை பெற்று ஆடையகத்தின் மூலம் வருவாய் கிடைக்க நிரந்தர சூழ்நிலை உருவாக்கி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் ஆடைகளை தைத்து ஆடையினை உடுத்தி பள்ளி மாணவ, மாணவிகள் தங்களுடைய சீருடைகளை தைத்து பயன்பெறுவார்கள். மேலும் இப்பயிற்சியில் 100 பெண்கள் வேலை வாய்ப்பினை பெற்று பொருளாதார ரீதியாக தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி உள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காளிதாசன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. சண்முகசுந்தரம், தனித்துணை கலெக்டர் (கலால்) மல்லிகா, வட்டாட்சியர்கள் அதியமான், கண்ணன், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.வி. அரங்கநாதன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் வீரமணி, கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத் தலைவர் எம். பழனிசாமி, முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் தொ.மு. நாகராஜன், முன்னாள் பாலக்கோடு ஒன்றியக்குழுத் தலைவர் கோபால் உட்பட துறை ரீதியான அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்