முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓசூரில் நாளை நீதிமன்ற புறக்கணிப்பு நடத்த வக்கீல்கள் முடிவு

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு & புதுச்சேரி வக்கீல்கள் நாளை (திங்கட்கிழமை) ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று ஓசூரில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் ஓசூரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஓசூர் வக்கீல்கள் சங்க தலைவர் சிவசங்கர் தலைமை வகித்தார். தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வேல், பொருளாளர் காமராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறுநீதிமன்ற கட்டண உயர்வு குறித்து 17.2.2017 தேதி தமிழக அரசின் அரசாணையை மறுசீராய்வு செய்து புதிய அரசாணை பிறப்பிக்க வலியுறுத்துவது. வக்கீல்கள் சேம நல நிதியை ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் என்று உள்ளதை ரூ.10 லட்சமாக உடனே உயர்த்திட வேண்டும். இளம் வக்கீல்களுக்கு முதல் 5 ஆண்டுகளுக்கு பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் வழங்குவதை போல மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்கிட வேண்டும். உச்சநீதிமன்ற கிளை ஒன்றை தமிழகத்தில் அமைத்திட ஆவண செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற கிளை ஒன்றை தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் அமைத்திட வேண்டும். சிவகங்கை வக்கீல் பில்லப்பன் படுகொலையை வன்மையாக கண்டிப்பது, இந்த கொலைக்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20ம் தேதி (திங்கட்கிழமை) ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்வது என்றும், இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து வக்கீல்களும் கலந்து கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த கூட்டத்தில் அரசு வக்கீல் ஜீவானந்தம், மூத்த வக்கீல்கள் வெங்கட்ராம்ரெட்டி,சிவண்ணகவுத்ரி, விஜயன், மஞ்சுநாதா, ஆனந்தகுமார், முன்னாள் தலைவர் ராஜ் விவேகானந்தன், மற்றும் சரத், ப்துல்ரஹிம்,சின்னபில்லப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஓசூர் வக்கீல்கள் சங்க செயலாளர் கதிரவன் நன்றி கூறினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்