முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலியே சிறந்த பேட்ஸ்மேன் - பிளின்டாப்

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : சுமித், ஜோ ரூட்டை விட கோலியே சிறந்த பேட்ஸ்மேன் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான பிளின்டாப் தெரிவித்துள்ளார்.

கோலி ஒரு படி மேல் ...

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரூ பிளின்டாப் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தற்போது முன்னணியில் உள்ள ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா), கனே வில்லியம்சன் (நியூசிலாந்து), ஜோ ரூட் (இங்கிலாந்து), விராட் கோலி (இந்தியா) ஆகிய 4 கேப்டன்களையும் ஒப்பிட்டு பாருங்கள். அனைவரும் மிகச்சிறந்த வீரர்கள். ஆனால் மற்ற மூன்று பேரையும் விட விராட் கோலி ஒரு படி மேலே இருக்கிறார்.

தனது கட்டுப்பாட்டில் ...

கோலியின் பேட்டிங்கை உன்னிப்பாக கவனியுங்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் உள்ள அனைத்து விதமான ஷாட்டுகளும் அவரது கைவசம் உள்ளது. தந்திரமாகவும் செயல்படுகிறார். அனைவரையும் கவர்ந்த ஒரு விஷயம் இது. குறுகிய ஓவர்கள் கொண்ட போட்டிகள் என்றால், எந்த வித ரிஸ்க்கும் எடுக்காமல் பந்தை பவுண்டரிகளுக்கு சாத்துகிறார். ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிறார். ஏற்கனவே குறிப்பிட்டது போல் மற்ற மூன்று வீரர்களும் சிறந்தவர்கள் தான். ஆனால் கோலி வேறு ஒரு உலகத்தில் இருக்கிறார்.  இவ்வாறு பிளின்டாப் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago