முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலமாக திருப்பூர் மாவட்டத்திற்கான 815 வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.89.45 கோடி மதிப்பீட்டில் துவக்கி வைத்தார்.

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      கோவை

கோயம்புத்தூர் மாவட்டம், கொடிசியா அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில்  தமிழ்நாடு முதலமைச்சர்  காணொலி காட்சி மூலம் திருப்பூர் மாவட்டத்திற்கான 815 வளர்ச்சிப் பணிகளை ரூ.89.45 கோடி மதிப்பீட்டில் துவக்கி வைத்தார்.

         திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற விழாவில்  தமிழ்நாடு முதலமைச்சர்  காணொலி காட்சி மூலமாக திருப்பூர் மாவட்டத்தில் வீட்டுவசதி (ம) நகர்ப்புற வளர்ச்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சி துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை, உள்துறை, மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலத்துறை, ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறை, நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலை (ம) சிறு துறை முகங்கள் துறை, வேளாண்மைத்துறை, கால்நடைபராமரிப்பு துறை, பால் வளம் (ம) மீன் வளத்துறை, சுற்றுச்சூழல் (ம) வனளத்துறை, கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை என மொத்தம் 815 பணிகளை ரூ.89.45 கோடி மதிப்பில்  திறந்து வைத்தார்கள்.

         மேலும், இவ்விழாவில் மாவட்ட கலெக்டர்  ச.ஜெயந்தி  மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் குருநாதன், துணை கலெக்டர்கள், வட்டாட்சியர்கள், தொடர்புடைய அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்