முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அறிவொளி நகரில் புதிதாக கட்டப்பட்ட புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      திருப்பூர்

கோயம்புத்தூர் மாவட்டம், கொடிசியா அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில்  தமிழ்நாடு முதலமைச்சர்  வீட்டு வசதி  மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் திருப்பூர் பல்லடம் அறிவொளி நகரில் ரூ.19.75 கோடி மதிப்பில் 288 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலி காட்சி மூலம்  திறந்து வைத்தார்கள்.

                  இதனைத் தொடர்ந்து,  திருப்பூர்  மாவட்ட  ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில்,  பல்லடம்  ஊராட்சி  ஒன்றியம்,  ஆறுமுத்தாம்பாளையம்  ஊராட்சி,   அறிவொளி நகரில் ரூ.19.75 கோடி  மதிப்பில்  தமிழ்நாடு  குடிசைப்பகுதி  மாற்று  வாரியத்தால்  கட்டி முடிக்கப்பட்ட  288  குடியிருப்புகளுக்கு   ஒதுக்கீடு  ஆணைகளை  பயனாளிகளுக்கு       வீட்டு   வசதி   மற்றும்  நகர்ப்புற   வளர்ச்சித்துறை   அமைச்சர்   உடுமலை கே. ராதாகிருஷ்ணன்  வழங்கினார்.

                  பயனாளிகளுக்கு குடியிருப்பு  ஒதுக்கீடு ஆணைகளை வழங்கி   வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  பேசியதாவது 

                          மறைந்தும் மறையாமலும் மக்கள் மனதில் வாழ்ந்து வருகின்ற மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா  வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழக அரசு தமிழக மக்களின்  வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக சிறப்பான முறையில் அனைத்து துறைகளும் செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் வீட்டுவசதி வாரியத்தின் சார்பில்   வீடற்ற

 

          ஏழைகளுக்கு சுமார் 10 லட்சம் வீடுகள் கட்டி தரப்படும் என  மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா   கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அறிவித்தார்கள் அதன்படி திருப்பூர் மாநகர பகுதிகளில் உள்ள  நீர்நிலைகளில் வசிக்கும் பொது மக்களுக்காக மாற்று வீடுகள் கட்டி தரவேண்டும் என்பதற்காக பல்லடம் அறிவொளி நகரில் குடிசை பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் சுமார் 3.75 ஏக்கர் பரப்பளவில் ரூ.19.75 கோடி மதிப்பில் 288 அடுக்குமாடி குடியிருப்புகள் சிறப்பான முறையில் கட்டப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழை எளியோh இல்லாத நிலை வேண்டும் என்பதற்காக குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக ரூ.2.10 லட்சம் மதிப்பில் முழுமானியத்துடன் வீடுகள் கட்டிக்கொள்ளுவதற்கும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக அரசு அளிக்கின்ற  அனைத்து நலத்திட்டங்களையும் பெற்றுகொண்டு வாழ்வில் வளம் பெற வேண்டும் என  அமைச்சர்  தெரிவித்தார்கள்.

 

          இந்நிகழ்வின்போது  மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கரைப்புதூர் ஏ. நடராஜன் (பல்லடம்), கே.என். விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), உ.தனியரசு (காங்கேயம்), குடிசை மாற்று வாரியம் கண்காணிப்பு பொறியாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்