முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு இ _சேவை மையங்கள் மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு நேர்காணல்

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      நீலகிரி

அரசு இ_சேவை மையங்கள் மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு நடப்பாண்டு முதல் நேர்காணல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

                                                     நேர்காணல்

மாவட்ட கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கருவூலத்தில் நேரடியாக ஆஜராகி நேர்காணலை பதிவு செய்யவும், வர இயலாதவர்கள் வாழ்வுச்சான்று பெற்று கருவூலத்திற்கும் அனுப்ப வேண்டும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம்  வரை

நேர்கணலுக்கு ஆஜராகி பதிவு செய்ய கருவூலத்தின் வேலை நாட்களில்  வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

                               இ_சேவை மையங்கள்

ஜீவன் பிரமான் வாழ்வு சான்றிதழ் திட்டம் மூலம் ஓய்வூதியர்கள் சம்பந்தப்பட்ட கருவூலங்களுக்கு செல்லாமலேயே அரசு இ_சேவை மையங்கள் வழியாக நேர்காணலை இணையதளத்தில் ஆதார் அட்டை வாயிலாக பதிவு செய்ய நடப்பாண்டு முதல் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நேர்காணலுக்கு நேரில் வருபவர்கள் இதுவரை ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை சமர்பிக்காத ஓய்வூதியர்கள், மேற்படி ஆவணங்களிண் நகல்களுடன் தங்களின் ஓய்வூதிய கொடுவை ஆணை எண்ணை குறிப்பிட்டு கருவூலத்தில் சமர்பிக்க வேண்டும். ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்கு வரும்போது ஓய்வூதியப் புத்தகம் மற்றும் நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.

                               இணையதளம்

நேரில் வர இயலாத ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதிய புத்தகம், நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண், ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை போன்ற ஆவணங்களின் நகல்களுடன் வாழ்வு சான்றை உரிய படிவத்தில் ஓய்வூதியம் பெறும் கருவூலத்திற்கு அனுப்பப்ட வேண்டும். வாழ்வுச்சான்று படிவத்தை என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்தகைய வாழ்வு சான்று படிவத்தினை ஓய்வூதிய வங்கி கணக்கு உள்ள கிளை மேலாளர் அல்லது அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் அல்லது வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளரிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும். அனைத்து நகல்களிலும் ஓய்வூதியர்கள் தங்களின் ஓய்வூதிய கொடுவை எண்ணை குறிப்பிட்டு ஓய்வூதியம் பெறும் கருவூலத்தில் கொடுக்க வேண்டும்.

                                       ஓய்வூதியம் நிறுத்தம்

ஓய்வூதியர்கள் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நேர்காணலுக்கு வரத்தவறினாலோ அல்லது சான்றொப்பம் செய்யப்பட்ட வாழ்வுச்சான்றினை அனுப்பத் தவறினாலோ ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் ஆகஸ்ட் மாதம் முதல் நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வாழ்வுச்சான்றுகளுக்கான மாதிரிப் படிவத்தை சூசூசூ.சிடூ.கிச்சு.டுடூகூஹஙுசீசுச்ச்ங்ஹஙி/  என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது வரை ஓய்வூதியர் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பம் அளிக்காதவர்கள் கருவூலத்தில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுத்துறை வங்கிகளின் மூலம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், தமிழ்நாடு மின்சார வாரியம், ரயில்வே, அஞ்சல்துறை, தொழிலாளர் வைப்பு நிதித்திட்டம், மத்திய அரசு ஓய்வூதியர்கள், உள்ளாட்சி மன்ற ஓய்வூதியர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்ததா. பொதுத்துறை வங்கிகளின் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் வங்கிகள் மூலம் நேர்காணல் உரிய காலவரைமுறைபடி தனியே தொடர்புடைய வங்கிகள் மூலம் மேற்கொள்ளப்படும். இத்தகவலை மாவட்ட கருவூல அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago