முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 8 வி்க்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      விளையாட்டு
Image Unavailable

வெலிங்டன் : வெலிங்கடனில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 8 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

359 ரன் குவித்து

தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 16-ம் தேதி வெலிங்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பீல்டிங் தேர்வு செய்தது. டுமினியின் சுழற்பந்தில் சிக்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 268 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. டுமினி 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய தென்ஆப்பிரிக்கா நேற்று முன்தினம் 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 349 ரன் எடுத்து இருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா 359 ரன் குவித்து ‘ஆல்அவுட்’ ஆனது. 94 ரன்கள் எடுப்பதற்குள் 6 வி்க்கெட்டுக்களை இழந்து திணறிய தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோர் 300 ரன்னை தாண்டுவதற்கு குயிண்டன் டி காக் (91), பவுமா (89) முக்கிய காரணமாக இருந்தனர்.

81 ரன் இலக்கு

91 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை விளையாடியது. தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளரான கேஷவ் மகாராஜ் பந்தில் 171 ரன்னில் சுருண்டது. மகாராஜ் 20.2 ஓவர்கள் வீசி 40 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் அள்ளினார். மோர்னே மோர்கல் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜீத் ராவல் மட்டுமே தாக்குபிடித்து 80 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 80 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றதால், தென்ஆப்பிரிக்காவுக்கு 81 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

8 விக்கெட் வித்தியாசத்தில் ....

81 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 24.3 ஓவரில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 83 ரன்கள் சேர்த்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்திய மகராஜ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஹாமில்டனில் 25-ந்தேதி தொடங்குகிறது. இதில் நியூசிலாந்து கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். இல்லையெனில் தென்ஆப்பிரிக்கா தொடரை கைப்பற்றிவிடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்