முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

Buff -First Clap-குறும் படங்களுக்கான போட்டியில்-இறுதி வெற்றியாளர்கள்!

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2017      சினிமா
Image Unavailable

Movie Buff இன் ஓர் அங்கமான First Clap, இந்தியாவிலேயே முதல்முறையாக, அறிமுக திரை படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதத்தில், மூன்றே நிமிட ஓட்ட் நேரத்தில் ஒரு குறும் படத்தை எடுத்து போட்டிக்கு சமர்பிக்கும் ஒரு போட்டியை அறிவித்திருந்தது அறிந்ததே! கடந்த ஆண்டு December ம்மதம் தொடங்கிய இந்த போட்டியில் மொத்தம் 250 குறும்படங்கள் பங்குக்கொண்டன. அவற்றில் இருந்து, 5 சிறந்த குறும்படங்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. மார்ச் , ஏப்ரல் மாதாமுமாக 150 திரையரங்குகளில் அவை திரையிடப்பட உள்ளன.

Qube Cinema Network இல் இவை திரையிடபடும்.முதல் மூன்று சிறந்த குறும்படங்களுக்கு பரிசாக பணம் வழங்கப்படும்; அது தவிர, அதன் இயக்குநர்கள் நடிகர் சூரியாவின் 2D Entertainment நிறுவனத்திற்காக கதை சொல்ல அழைக்கப்படுவார்கள். அந்த தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிவதற்கான வாய்ப்பும் கிடைக்க வாய்ப்புண்டு! தேர்வு செய்யப்பட்ட குறும்படங்கள் பின்வருமாறு-பிரதீப்ரங்கநாதன் இயக்கிய அப்பாலக் மகேஷ்பாலசுப்ரமணியம் இயக்கிய இந்த நாள் இனிய நாள்,ஸ்ரீவிஜய்கணபதிஇயக்கிய அவள் அழகு , நட்டுதேவ் இயக்கிய திங்க் &இங்க மற்றும் பிரபு ஜெயராம் இயக்கிய என்னங்க சார் உங்க சட்டம் குறும்படங்களை மதிப்பீடு செய்த குழுவில், ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர்,பி சி ஸ்ரீராம் இயக்குநர்கள், வெற்றி மாறன், எழில் ஹரிவிஸ்வநாத் அருண்குமார் ஒளிப்பதிவாளர், மகேஷ் முத்துசாமி படதொகுப்பு நிபுணர், பிரவீன் 2டி நிறுவனத்தின் சி இ ஒ ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் ஒலிபதிவாளர் உதயகுமார் சென்னை சர்வதேச குறும்பட திருவிழா இயக்குநர் சீனிவாச சந்தனம் மற்றும் சதீஸ்குமார் சிஇஒ சொம்மொன்மன் மீடியா (திரைப்பட வர்த்தக ஆய்வாளர் மற்றும் விமர்சகர்) இந்த வகையான ஒரு திரையிடல் மூலமாக, சினிமா விரும்பிகள் நேரிடையாக தங்களது கருத்துகளை சம்பந்தப்பட்ட இயக்குநர்களுக்கு சொல்ல முடியும்! மூன்றே நிமிடங்களில் ஓர் எளிய அழகிய கதையை சொல்லுவதேன்பது ஒரு சவால் தானே! இளம் இயக்குநர்கள் பலரிடம் ஒளிந்து கொண்டுள்ள திறமைகளை வேளி கொணர ஓர் அரிய சந்தர்ப்பம் இது என்கிறார், நடிகர் சூரியா. திறமை கொண்ட இளம் சிருஷ்டி கர்த்தாக்கள் மேம்பாடு அடைய 2D நிறுவனம் செரந்த முறையில் சந்தர்ப்பம் அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.திறமைமிக்க இளம் இயக்குநர்களை ஊக்குவிக்கவும் அவர்களுக்கு தக்க வாய்ப்புகள் வாங்கி தரவும் முயற்சி செய்வதே எங்களது நிறுவனம், என்கிறார், அரவிந்த் ரங்கநாதன் சி இ ஓ , Qube Cinema Technologies இயக்குநர் ஜெயேந்திர மற்றும் 5 குறும்பட இயக்குநர்களும், படங்கள் திரையிடப்பட்ட பின்னர்,மீடியா நண்பர்களோடு கலந்துரையாடலில் பங்கு கொண்டார்கள். குறிப்பிட்ட திரையரங்குகளில், இந்த குறும்படங்கள், இடைவேளை நேரத்தில் காண்பிக்கப்படும். வெற்றிபெற்ற பட இயக்குநர்கள், 2D நிறுவனத்தில் கதை சொல்லவும் படம் உருவாக்குவதில் பங்கு பெறவும் அழைக்கப்படுவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago