முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

“கடுகு” திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2017      சினிமா
Image Unavailable

“கடுகு” திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் சூர்யா, பாடல்கள் குருந்தகட்டை வெளியிட, கருணைவேல் –- சொர்ணலட்சுமி தம்பதி, ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை, போக்குவரத்து காவலர் குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். இந்த மூவரும் தங்களது சேவைகள் மூலம் மக்களை ஈர்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கோவில் போல சேவையாக இவர்கள் நடத்தும் இந்த ஓட்டலில் 26 வகையான உணவு வகைகள் பரிமாறப்படும்.

இவர்களது இந்த தனிப் பண்புகளை பாராட்டும் வகையில், ‘‘கடுகு’’ படத்தின் பாடல்கள் இவர்கள் மூலமாக வெளியிடப்பட்டது. நடிகர் பரத் பேசுகையில், என்னைக்கும் நான் சம்பளத்தை இரண்டாம் பட்சமாகத்தான் வைத்திருக்கிறேன். அதனாலா தான் போட்டியான சினிமாவுல என்னால பதினாலு வருஷம் நீடிக்க முடிந்தது. அவர்கூட 2005 அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது வொர்க் பண்ணினேன் , அதன் பிறகு சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பணிபுரிந்தது சந்தோஷமாக இருக்கிறது என்றார். எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் என்னனா, நாம நல்ல படம் பண்ண தான் போராடுறோம் , சக்ஸஸ் படம் பண்ண தான் போராடுறோம், ஆனா நல்ல படம் பண்ணாலும் சில படங்கள் சரியாக போவதில்லை. என்னோடு விளையாடு படம் கூட அப்படி தான் அமைந்தது. நல்ல தியேட்டர் கிடைக்கல, சரியான விளம்பரம் இல்ல, ஆனா அது முடிந்து போன விஷயம். ஆனால், இந்த படத்திற்கு அனைத்தும் சரியான முறையில் கிடைச்சிருக்கு என்றும் அவர் கூறினார். நடிகர் சூர்யா பேசும் போது, ‘‘எப்பவுமே சின்ன பட்ஜெட் படத்துல மனசார விஷயம் நடக்கும். என்ன தடங்கள் வந்தாலும், என்ன பிரச்சினை வந்தாலும் நடத்தி காட்டணும் என்ற எண்ணம் சின்ன பட்ஜெட் படங்களில் தான் வரும்.

எனக்கும் அந்த அனுபவம் இருக்கு. மறுபடியும் ஒரு கருவில் இருந்து வெளியே வந்தால் பிறகு அதுக்குள்ள போக முடியாது என்று சொல்வார்கள் இல்லையா, ஆனால் மீண்டும் அதுபோல ஒரு இடத்துக்கு போகனும் என்று எனக்கு ஆசை வந்தது. அதனால் அதுபோன்ற எண்ணத்தோடு, வெறியோடு இருப்பவர்களுடன் நான் இணைந்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இவர்களோடு இணைந்தேன்’ என்று குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago