முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11 இந்திய பெண்களுக்கு தலைசிறந்த மகளிர் விருது: சிங்கப்பூர் பல்கலை கழகம் வழங்கியது

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

சிங்கப்பூர் : சமூக சேவைக்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த 11 இந்திய பெண்கள் உள்பட 25 ஆசிய பெண்களுக்கு ‘தலைசிறந்த மகளிர்’ விருது சிங்கப்பூரில் வழங்கப்பட்டது.

வீரத்தில் சாதித்த வந்தன சர்மா 

சிங்கப்பூர் நான்யாங் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் வர்த்தக மேம்பாடு ஆராய்ச்சி குழுமம் இணைந்து இந்த விருதினை வழங்கின. இந்திய ராணுவத்தில் பல ஆண்டுகள் சேவையாற்றி, பெண்களும் வீரத்தில் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்த வந்தனா சர்மாவுக்கும் விருது வழங்கி கவுரவம் அளிக்கப்பட்டது. விருதினை பெற்ற வந்தனா, ஆக்கப்பூர்வமான அமைப்புகளை கட்டமைக்கும் இளம் நிறுவனர்களுக்கு தன்னால் முயன்ற உதவிகளை வழங்கி வருவதாக தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு எதிராக 1999-ல் நடந்த கார்கில் போரில் வந்தனாவின் பங்கு எவராலும் மறக்க முடியாதது.

மகளிர் டாக்ஸி சேவை  ரேவதி

இதேபோல் மற்றொரு இந்தியரான ரேவதி சித்தார்தே ராய்க்கும் இவ்விருது வழங்கப்பட்டது. பொருளாதாரத்தில் பட்டமேற் படிப்பு முடித்த ரேவதி 2007-ல் கணவர் உயிரிழந்ததால் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக மும்பையில் 10 மாதங்கள் வரை டாக்ஸி ஓட்டியவர். 2007-ல் ஆசியாவின் முதல் மகளிர் டாக்ஸி சேவையை தொடங்கினார். பெண்களுக்கான இருசக்கர வாகன பயிற்சிப் பள்ளியையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ‘ஹே திதீ’ என்ற பெயரில் பெண்களுக்கு இருசக்கர வாகனம் ஓட்ட கற்று தருவதுடன், உணவு முதல் மருத்துவ அறிக்கைகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட பார்சல்களை டெலிவரி செய்யும் தொழிலையும் நடத்தி வருகிறார். இதில் சுமார் 120 பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

‘ஹே திதீ’ என்ற அவரது நிறுவனம் மும்பை, பெங்களூரு, புனே, நாக்பூர், சென்னை மற்றும் கொல்கத்தாவில் இயங்கி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்நிறுவனம் மூலம் 10 ஆயிரம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப் போவதாக ரேவதி தெரிவிக்கிறார்.

டாக்டர் ஸ்ரீமதி கேசவன்

அவரது இந்த சேவையை பாராட்டி 2016-ல் நிதி ஆயோக்கின் மகளிர் மயமாகும் இந்தியா விருது வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு விமான தொழில்நுட்பத்தை கற்று தரும். சென்னையை சேர்ந்த டாக்டர் ஸ்ரீமதி கேசனுக்கும் சிங்கப்பூரில் விருது வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்