பிரிந்து கிடக்கும் நமது தேசத்தை ஒன்றிணைக்க இணைந்து பணியாற்றுவோம்: ஹிலாரி கிளிண்டன்

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2017      உலகம்
Hilary Clinton 2017 3 19

பென்சில்வேனியா : காயங்களிலிருந்து வெளியே வந்து அமெரிக்கர்கள் பொது தளத்தில் இயங்குவதற்கு உதவ தயாராக இருக்கிறேன் என்று ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.ர். அமெரிக்க அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பாக போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பென்சில்வேனியாவில்  நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய ஹிலாரி கிளிண்டன் பேசியபோது,"நான் காயங்களிலிருந்து வெளியேவந்து பொதுவெளியில் அமெரிக்க மக்களுக்கு உதவ தயராகக் இருக்கிறேன். டிரம்ப் அதிபரான பிறகு அமெரிக்காவில் நடந்த வன்முறைகளை செய்திகளில் பார்த்த நாட்கள் கடினமானவை அப்போது எனது பெரும்பாலான நண்பர்களின் மனநிலையில்தான் நானும் இருந்தேன். பல்வேறு பிரச்சினைகளால் பிரிந்து கிடக்கும் நமது தேசத்தை ஒன்றிணைக்க இணைந்து பணியாற்றுவோம்" என்றார்.

பொது நிகழ்ச்சியில் மீண்டும் ஹிலாரி

முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக்கட்சியின் சார்பாக போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன், குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப்பிடம் தோல்வியடைந்தார். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நடந்த பொது நிகழ்ச்சிகளில் ஹிலாரி பெரும்பாலும் கலந்து கொள்ளாமல் தவிர்ந்து வந்தார்.


இந்த நிலையில்  பென்சில்வேனியாவில் நடந்த பொது நிகழ்ச்சியில் தற்போதைய அமெரிக்க நிலவரம் குறித்து ஹிலாரி பேசியிருப்பது அமெரிக்க அரசியல் களத்தில் முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: