முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலுார் மாவட்டத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 326 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2017      கடலூர்

தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் , கலெக்டர்டி.பி.ராஜேஷ்,   மற்றும் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் வி.டி.கலைச்செல்வன்  ஆகியோர் முன்னிலையில் விருத்தாச்சலம் ஸ்ரீ விருதாம்பிகை தொழிற்பயிற்சி மையத்தில்  கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் - தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் புதுவாழ்வு திட்டம் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 326 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.மேலும்,  தொழில்துறை அமைச்சர்  39 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.17 கோடி மதிப்பிலான நேரடி கடன்களை வழங்கினார்.  தொழில்துறை அமைச்சர் , இந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தை முழு சுகாதாரம் பெற்ற மாவட்டமாக அறிவிக்கும் நோக்கத்தில் புதுவாழ்வு திட்டம் செயல்படும் நல்லூர், விருத்தாச்சலம், காட்டுமன்னார்ககோயில் மற்றும் மங்கள+ர் ஊராட்சி ஒன்றியங்களில் 18 களப்பகுதிகளில் உள்ள 18 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களில் மாதிரி சுகாதார கழிப்பறை அமைக்க தலா ரூ.30500- வீதம் மொத்தம் ரூ.5.49 இலட்சத்தை 18 ஊராட்சிகளுக்கு வழங்கினார். மேலும்,  தொழில்துறை அமைச்சர்  கடலூர் மாவட்டம் மாளிகைமேட்டை சேர்ந்த செல்வன் சக்திவேல் என்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.2000- மதிப்பிலான கழுத்து உதவி உபகரணத்தை வழங்கினார். தொழில்துறை அமைச்சர்  இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி விழா பேருரையாற்றியாதாவது, விருத்தாச்சலம் மற்றும் காட்டுமன்னார்கோயில் ஒன்றியங்களை உள்ளடக்கி நடைபெற்றுள்ள வேலைவாய்ப்பு முகாமில் 3000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் 2126 இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக தங்களை பதிவு செய்து கொண்டனர். இம்முகாமில் 24 தனியார் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த வேலை வழங்கும் நிறுவனங்கள் மூலம் 967 இளைஞர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இதில் 326 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற இந்த வேலைவாய்ப்பு முகாமிற்காக தமிழக அரசு ரூ.1 இலட்சம் செலவிட்டுள்ளது. இன்று பணி நியமன ஆணை பெறும் இளைஞர்கள் அனைவரும் சம்பளத்தைப்பற்றி கவலைப்படாமல் மிகவும் பொறுப்போடு தங்களுக்கு வேலை கொடுத்த நிறுவனத்தின் முன்னேற்ற்திற்காக உழைக்கவேண்டும். சுய தொழில் தொடங்குவதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு திட்டத்தின் மூலம் சுய தொழில் தொடங்குவதற்காக ரூ.1 கோடி கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் 25 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்த தமிழக மக்களும் பயன்பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு செயல்பட்டு வரும் அரசு இந்த அரசாகும். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி தற்பொழுது ரூ.18000-மாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.1001 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வழங்க 50 சதவிகிதம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் வாழும் படித்த இருபால் இளைஞர்களும் தங்கள் வேலை தொடர்பான தேடுதலை நிறுத்திவிடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். முதலில் சிறிய நிறுவனங்களில் பணியாற்றுவதை ஒரு படியாக நினைத்து கடினமாக உழைத்து இரண்டு மூன்று வருடங்கள் கழித்து அதிக சம்பளம் வழங்கும் நல்ல நிறுவனங்களை தேடி பணியாற்றவேண்டும். தொழில்துறையின் மூலம் 2017-18ம் ஆண்டில் உலக தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்துவதற்காக ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கார் உற்பத்தி மற்றும் கார் உதிரி பாகம் தயாரிப்பதிலும் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடம் வகிக்கிறது என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். தமிழக அரசு மனித வளத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. இன்று பணி நியமன ஆணைகளை பெறும் இளைஞர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வாய்ப்பு கிடைக்காத மற்ற இளைஞர்களுக்கு அரசின் மூலம் அடுத்த வாய்ப்பினை உருவாக்கி தருவேன் என்ற உத்தரவாதத்தை தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்கலெக்டர் பேசியதாவது,நமது நாட்டில் இந்தியாவிலேயே பல்வேறு வகையில் வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்த வளர்ச்சியில் படித்த இளைஞர்கள் முக்கிய அங்கம் வகித்து வருகிறார்கள். இளைஞர்களை ஊக்குவிப்பதற்காகவும், சுய தொழில் தொடங்குவதற்காகவும் மறைந்த  முதலமைச்சர் அவர்களால் Nநுநுனுளு திட்டம் கொண்டு வரப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. படித்த இளைஞர்கள் வீட்டில் இருக்காமல் வேலைவாய்ப்பினை தேடவேண்டும். மகளிர் திட்டம் மூலமாகவும், புதுவாழ்வு திட்டம் மூலம் பலவிதமான பயிற்சி அளிக்கிறார்கள். இப்பயிற்சியில் இளைஞர்களுடைய திறன் வளர்க்கப்பட்டு இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களில் வேலைவாய்ப்பு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வேலைவாய்ப்பினை பெற்றவர்கள் இதனை ஒரு ஆரம்பமாக எடுத்துக்கொண்டு மேலும் மேலும் முன்னேற வேண்டும். இதற்காக முழுமையாக உழைக்கவேண்டும். இந்த முகாமில் பணி ஆணைகளை பெறும் அனைத்து இளைஞர்களுக்கும் கலெக்டர்என்ற முறையில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர்  தெரிவித்ததாவதுமறைந்த  முதலமைச்சர் அம்மா  அறிவித்த அனைத்து திட்டங்களுக்கும் 2017-18ம் ஆண்டு நிலை நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டு வரியில்லாத நிதி நிலை அறிக்கையை தமிழ்நாட்டு மக்களுக்கு  முதலமைச்சர்  வழங்கியிருக்கிறார்கள். இந்த அரசு மக்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றக்கூடிய அரசாக தொடர்ந்து செயல்படும். ஆகவே, நாம் அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் கிருபானந்தம், புதுவாழ்வு திட்ட மாவட்ட திட்ட மேலாளர்  ப.சுதாதேவி, மகளிர் திட்ட திட்ட இயக்குநர் (பொ) சு.ஆறுமுகம், உதவி திட்ட மேலாளர் என்.பழனிச்சாமி, நகர கூட்டுறவு வங்கியின் தலைவர் காமராஜ், உதவி திட்ட அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago