முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொல்லவிளை அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் விஐயகுமார் எம்.பி. ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2017      கன்னியாகுமரி
Image Unavailable

மாநிலங்களை உறுப்பினர் அ.விஐயகுமார்      நாகர்கோவில், தொல்லவிளையில் உள்ள அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழக அரசு, மக்களின் நலன் கருதி, பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அலுவலகங்களை, நிரந்தரமான கட்டிடத்தில் இருந்து மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டதின் அடையாளமாக, நாகர்கோவில் நாகராட்சி 40-வது வார்டு தொல்லவிளையில் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் வாடகை கட்டிடத்திலிருந்து, தற்போது தேசிய நகர்புற திட்டத்தின்கீழ் ரூ.50 இலட்சம் செலவில் நிரந்தர கட்டிடத்தில் செயல்பட தொடங்கியுள்ளது. இந்த சுகாதார நிலையம் பாராளுமன்ற(மேல்சபை)  மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதிக்கீடு செய்து, விரைவில் தரம் உயர்த்துவதற்காக அனைத்து நடவடிக்ககைகளும் மேற்கொள்ளப்படும். இந்த மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு, பிரசவ வார்டு, தடுப்பூசி பிரிவு, தொற்றுநோய் பிரிவு உட்பட பல்வேறு வசதிகள் உள்ளன.இவை அனைத்தும் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொண்டார்.மேலும், நாகர்கோவில் நகராட்சி பகுதியிலுள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நாகர்கோவில், வடசேரி பேருந்து நிலையம் அருகில், பாராளுமன்ற உறுப்பினர்(மேல்சபை)  மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2 கோடி செலவில், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயரில் புதிய திருமண மண்டபம் கட்டப்பட்டு, வருகிற அம்மா பிறந்த நாள் அன்று திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மாநிலங்களை உறுப்பினர் அ.விஐயகுமார் அவர்கள் பேசினார்.  பின்னர், அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நாட்டினார்.நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில தலைமை மீன்வளக் கூட்டுறவு இணையத்தலைவர் எம்.சேவியர் மனோகரன், நாகர்கோவில் நகராட்சி ஆணையர்(பொ) சுரேஷ்குமார், அரசு வழக்கறிஞர் ஞானசேகர், என்.என்.ஸ்ரீஐயப்பன், கனகராஐன், நகர்நல அலுவலர் டாக்டர் வினோத் ராஜா, நாஞ்சில் சந்திரன், இராஐரத்தினம், வேல்முருகன், தங்கம், லெட்சுமிகாந்த், சகாய வெனிஸ், டாக்டர். nஐபர்சன், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்(ஓய்வு) சபேசன், நாகர்கோவில் அகில இந்திய வானொலி நிலைய அலுவலர்(ஓய்வு) மங்காவிளை இராஜேந்திரன், காமராஐ, சதீஸ், ரமேஷ், ஜெயசந்திரன், மோகன், கண்ணன், திலக்ஸ் மற்றும் தொல்லவிளை ஊர் பொது மக்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்