முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன்கோவிலில் நீர் மோர் பந்தல் திறப்பு: அமைச்சர்கள் கடம்பூர்ராஜூ,ராஜலெட்சுமி பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2017      திருநெல்வேலி
Image Unavailable

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் நகர அதிமுக மற்றும் மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.  தற்போது நிலவி வரும் வெயிலின் தாக்கத்திற்கு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்சியினரை தமிழகம் முழுவதும் நீர் மோர் பந்தலை அமைக்க கட்சி தலைமை உத்தரவிட்டிருந்தது. அதன் பேரில் கட்சியினர் அனைத்து ஊர்களிலும் நீர் மோர் பந்தல்களை திறந்து வருகின்றனர். நெல்லை மாநகர் மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதி, சங்கரன்கோவில் பஸ் நிலையம் முன்பு அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தல் நேற்று திறக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை அமைச்சர்கள் வி.எம்.இராஜலெட்சுமி மற்றும் கடம்பூர் ராஜு ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்கள்.  தொடர்ந்து பொதுமக்களுக்கு இலவசமாக மோர், குடிநீர், ஆரஞ்சு ஜுஸ், இளநீர், தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டன. விழாவில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கண்ணன், நகர செயலாளர் ஆறுமுகம், தொகுதி இணை செயலாளர் வேலுச்சாமி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் முருகையா, ஒன்றிய செயலாளர் வாசுதேவன், நகர பொருளாளர் பரமகுருநாதன், நகர எம்ஜிஆர் இளைஞரணி தலைவர் சவுந்தர், நகர துணை செயலாளர் சுந்தர், எம்ஜிஆர் மன்ற செயலாளர் சின்னராஜ், மாநில பேச்சாளர்கள் லெட்சுமணன், ராமசுப்பிரமணியன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் ஆனந்த், முத்துக்குட்டி, கணேசன், அருணகிரி, ஆப்ரேட்டர் மணி, கிரு~ணசாமி, ஹரிஹரகருப்பையா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  முன்னதாக தேரடி திடலில் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர்கள் திறந்து வைத்தனர். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைவேலு மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்