முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2017      விளையாட்டு
Image Unavailable

வெலிங்டன் : நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வெலிங்டன் நகரில் நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 268 ரன்களை எடுத்தது. இதைத்தொடர்ந்து ஆடவந்த தென் ஆப்பிரிக்க அணி, 2-ம் நாள் ஆட்டத்தின் இறுதியில் 9 விக்கெட் இழப்புக்கு 349 ரன் களை எடுத்திருந்தது. பிலாண்டர் 36 ரன்களுடனும், மோர்கல் 31 ரன்களுடனும் ஆடிக்கொண்டி ருந்தனர். 3-ம் நாளான நேற்று ஆட்டத்தை தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணி, மேற்கொண்டு 10 ரன்களைச் சேர்த்த நிலையில் 359 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 40 ரன்களை எடுத்த மோர்கல், ஜீதன் படேலின் பந்தில் ஆட்டம் இழந்தார்.

தென் ஆப்பிரிக்க அணியை விட 91 ரன்கள் பின்தங்கிய நிலை யில், நியூஸிலாந்து அணி 2-வது இன்னிங்ஸை ஆட வந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்கார ரான ஜீத் ராவல் ஒருபுறம் நிலைத்து ஆடி 80 ரன்களைக் குவித்தார். ஆனால் மற்ற முன்னணி பேட்ஸ்மேன்களான லதாம் (6 ரன்கள்), வில்லியம்சன் (1 ரன்), புரூம் (20 ரன்கள்), நிகோலஸ் (7 ரன்கள்), நீஷம் (4 ரன்கள்) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆக, 171 ரன்களுக்கு நியூஸிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸை இழந்தது. தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சாளரான கேசவ் மகராஜ் 40 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார்.

வெற்றிபெற 81 ரன்களை எடுத்தால் போதும் என்ற நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடவந்த தென் ஆப்பிரிக்க அணி, 24.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 83 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில், தென் ஆப்பிரிக்க அணி, 1-0 என்ற முன்னிலையைப் பெற்றது. இப்போட்டியின் 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க வீரர் கேசவ் மகராஜ், ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்