முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குளங்களை தூர்வார தனியார் தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் முன்வரவேண்டும் கலெக்டர்

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2017      திண்டுக்கல்
Image Unavailable

ஒட்டன்சத்திரம்.- ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள குளங்கள், சிறிய தடுப்பணைகள், நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வார தொண்டு நிறுவனங்கள் மற்றும்  தனியார் நிறுவனங்கள் முன்வரவேண்டும் என ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் நீர் ஆதாரங்களை செம்மைப்படுத்த நடந்த ஆலேசானை கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.டி.ஜி.வினய் கேட்டுக்கொண்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் ஒட்டன்சத்திரம் நகரம் மற்றும் அருகில் உள்ள கிராமங்களின் நீர் ஆதாரங்களை செம்மைப்படுத்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒட்டன்சத்திரம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆiணாயாள் எம்.இளவரசன் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் ரோட்டரி சங்க செயலாளர் முருகேசன் வரவேற்று பேசினார்.

இக்கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.டி.ஜி.வினய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது, திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக போதிய மழை இல்லததால் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்துவிட்டது. ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 500 அடி ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு 1200 அடி முதல் 1500 அடி வரை ஆழ்துளை கிணறு அமைத்துள்ளனர். இதனால் நிலத்தடி நீர் மட்டம் ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நிலத்தடி நீரை சேமிப்பதன் அமைப்பதன் அவசியத்தை உணர்ந்து மழைநீரை சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர்; மட்டத்தை உயர்தலாம். கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் சராசரியன மழையளவு 780 மில்லிமீட்டர் தற்போது மழையளவு 280 முதல் 450 மில்லிமீட்டராக குறைந்துள்ளது. வரத்து வாய்க்கால்களில் தேவையற்ற கழிவுகளை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும் இதன் மூலம் வரத்து வாய்க்கால்களில் ஓரங்களில் குடியிருக்கும் குடியிருப்புகள் வெள்ள சேதத்திலிருந்து காப்பாற்றலாம், இதனை சரிசெய்ய ஒட்டன்சத்திரம் நகரம் மற்றும் ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள நீர் ஆதாரங்களான குளங்கள், சிறிய தடுப்பணைகள், நீர்;வழிப்பாதை, நீர் வரத்து வாய்க்கால்கள் ஆகியவற்றை தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களது வருவாயில் 2 சதவீத செலவு செய்து தூர்வாரி பொதுமக்கள் பயன்பெற முன்வரவேண்டும், மேலும் அணைகளை தூர்வார விரைவில் அரசு நிதிவரவுள்ளது. அவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பேசினார்.

இக்கூட்டத்தில் ஒட்டன்சத்திரம் கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களின் சேர்மன் நல்லாசிரியர் ஜேக்கப்தாமஸ், ஒட்டன்சத்திரம் ரோட்டரி சங்க முதன்மை தலைவர் வெங்கடாசலம், ஒருங்கிணைப்பாளர் தனிகாசலம், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் பி.மாரிமுத்து. ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் பிரிட்டோ, ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலர்கள், வருவாய் துறை அதிகாரிகள், ஒட்டன்சத்திரம் வர்தக சங்கம், காய்கறி மார்க்கெட் சங்கம், தயிர் மார்க்கெட் சங்கம், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago