முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சானார்பாளையத்தில் மேட்டூர் கிழக்குகரை வாய்க்கால் தூர் வாரும் பணி: அமைச்சர் பி.தங்கமணி துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2017      நாமக்கல்
Image Unavailable

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்றத்தொகுதி, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குப்பாண்டபாளையம் ஊராட்சி, சானார்பாளையத்தில் மேட்டூர் கிழக்குகரை வாய்க்கால் தூர் வாரும் பணி துவக்க விழா நேற்று (19.03.2017) நடைபெற்றது. இவ்விழாவிற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். இவ்விழாவிற்கு டி.சி.எம்.தலைவர் பி.என்.கந்தசாமி. மாவட்ட கூட்டுறவு ஒன்றிய திலைவர் டி.கே.சுப்பிரமணியம், பள்ளிபாளையம் முன்னால் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் எஸ்.செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி அவர்கள் கலந்து கொண்டு மேட்டூர் கிழக்குகரை வாய்க்கால் தூர் வாரும் பணியினை துவக்கி வைத்தார். பின்னர் இது குறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்ததாவது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் வழியில் செயல்பட்டு வருகின்ற தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் உத்தரவின்படி தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஏரி, குளங்கள் மற்றும் கால்வாய்கள் தூர் வாரும் பணியான குடி மராமத்துப்பணிகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் 16 குடிமராமத்துப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மேட்டூர் கிழக்குகரை வாய்க்கால் உட்பட 3 இடங்களில் தலா ரூ.5.00 இலட்சம் வீதம் ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்துப்பணிகள் இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் நீர் ஆதாரங்கள் மேம்படுத்தப்பட்டு மழை காலங்களில் ஏரி குளங்களில் நீர் தேங்குவதற்கும், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கும் பெரும் வாய்ப்பாக அமையும். நாமக்கல் மாவட்டத்தில் இப்பணிகளை துரிதமாக மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் திருச்செங்;கோடு வருவாய் கோட்டாட்சியர் இரா.கீர்த்தி பிரியதர்சினி, பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்தின் மேட்டூர் அணைக்கோட்ட செயற்பொறியாளர்; ஆர்.சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் வி.இராஜேந்திரன், உதவிப்பொறியாளர் எஸ்.சாமிநாதன் குமாரபாளையம் வருவாய் வட்டாட்சியர் ரகுநாதன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago