ஓசூர் பஸ் நிலையத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு:அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2017      கிருஷ்ணகிரி
hsr 1

ஓசூர் பஸ் நிலையத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெய்யில் காலம் ஆரம்பிக்கும் போது பொது மக்களின் தாகம் தனிக்க தண்ணீர் பந்தல் திறப்பது வழக்கம். அது போலவே இந்த வருடமும் அதிமுக சார்பில் பொது மக்கள் கூடும் பஸ் நிலையத்தில் தண்ணீர் பந்தல் அமைத்து பொது மக்களுக்கு குடி நீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நேற்று கால்நடைபராபரிப்புத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கலந்து கொண்டு தர்பூசணி, நீர் மோர்,பானகம்,வெள்ளரிகாய் ஆகியவை பொது மக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் நாராயணன்,மாவட்ட பொருளாளர் நாராயணன்,மாவட்ட ஆவின் தலைவர் தென்னரசு,கூட:டுறவு சங்க தலைவர் சாகப்பா,முன்னாள் கவுன்சிலர்கள் ஜேபி(எ)ஜெயபிரகாஷ்,சக்திவேல்,நந்தகுமார்,தவமணி,சுரேஷ்,மாவட்ட சிறுபான்மை இணை செயலர் அன்வர் பாஷா,மாவட்ட இணை செயலாளர் நசீர் அகமது,அப்துல் கனி,ஏஜாஸ் அகமது,வட்ட செயலாளர் வீரய்யா முன்னாள் நகர செயலாளர் இளங்கோ,ரகுமான்,அரப்ஜான்,கார்த்திக்,சீனிவாசன்,மற்றும் மகளிரணியினர் ஜோதியம்மாள்,மீனாட்சி,வசந்தா,மகாலட்சுமி,ராஜம்மா,விஜயா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


 

இதை ஷேர் செய்திடுங்கள்: