முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொண்டிப்பட்டி காகித ஆலையிலிருந்து 8 கிராம மக்கள் பயன்பெரும் வகையில் இரண்டு புதிய பேருந்து வழித்தடங்கள்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2017      திருச்சி
Image Unavailable

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், மொண்;டிப்பட்டி காகித ஆலை தொழிற்சாலை வளாகத்திலிருந்து திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 8 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் இரண்டு பேருந்து புதிய வழித்தடங்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் , சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் , பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் நேற்று (19.03.2017) கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். நிகழ்ச்சிக்கு கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, தலைமை வகித்தார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.ரத்தினவேல் முன்னிலை வகித்தார்.ஆலம்பட்டிபுதூர், கரிச்சாம்பட்டி, மொண்டிப்பட்டி ஆகிய கிராம மக்கள் பயன்பெறும் வகையில் திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து காகித ஆலைக்கு கரிச்சாம்பட்டி வழியாக 3 நடைகளும், மொண்டிப்பட்டி காகித ஆலையிலிருந்து கரிச்சாம்பட்டி, ஆலம்பட்டிபுதூர் வழியாக திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்திற்கு 3 நடைகளும் இயங்கக்கூடிய பேருந்து புதிய வழித்தடத்தினை தொடங்கிவைத்தார்கள்.மேலும் தோகைமலை, சின்னரெட்டிபட்டி மற்றும் மொண்டிப்பட்டி கிராம பொதுமக்கள் பயன்பெரும் வகையில் குளித்தலையிலிருந்து மொண்டிப்பட்டி காகித ஆலைக்கு தோகைமலை, சின்னரெட்டிபட்டி வழியாக 2 நடைகளும், மொண்டிப்பட்டி காகித ஆலையிலிருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு சின்னரெட்டிபட்டி, தோகைமலை, காவல்காரன்பட்டி, ஆர்.டி.மலை வழியாக 2 நடைகளும் செல்லக் கூடிய பேருந்து புதிய வழித்தடத்தினை தொடங்கிவைத்தார்கள். இந்த பேருந்து புதிய வழித்தடத்தால் திருச்சி மற்றும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 கிராம மக்களும், மொண்டிப்பட்டி காகித ஆலையில் பணிபுரியும் 850க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெரிதும் பயனடைவார்கள். இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர்கள் ஏ.ஜி.ராஜராஜன் (ஸ்ரீரங்கம்), சக்திவேல் (குளித்தலை), மணப்பாறை வட்டாட்சியர் ராஜேந்திரன், போக்குவரத்து கழக நிர்வாக மேலாளர்கள் கே.மணி (திருச்சி), சி.ராஜேந்திரன் (கரூர்), மொண்டிப்பட்டி காகித ஆலை தலைமை நிர்வாக மேலாளர் கு~hல்பால்சிங், நிர்வாக மேலாளர் பட்டாபிராமன், துணை நிர்வாக மேலாளர் சுரேஷ் மேலாளர் பெரியசாமி, மேலாளர் (வணிகம்) ராஜ்மோகன், போக்குவரத்துக்கழக கிளை மேலாளர்கள் யேசுராஜ், ரவிச்சந்திரன், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago