பிஎன்பி பரிபாஸ் ஓபன் அரையிறுதி சுற்றுக்கு பெடரர் முன்னேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2017      விளையாட்டு
Roger Federer 2017 3 19

வெல்ஸ் நகர் : பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு ரோஜர் பெடரர் முன்னேறியுள்ளார்.

பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரரான ரோஜர் பெடரரும், ஆஸ்தி ரேலிய வீரரான நிக் கிர்கியாசும் மோது வதாக இருந்தது. ஆனால் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இப்போட்டியில் இருந்து விலகுவதாக நிக் கிர்கியாஸ் அறிவித்தார். இதைத் தொடர்ந்து ரோஜர் பெடரர் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். அரையிறுதிச் சுற்றில் அமெரிக்க வீரரான ஜாக் சாக்கை எதிர்த்து அவர் ஆடவுள்ளார்.

முன்னதாக நேற்று நடந்த மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஜப்பானைச் சேர்ந்த முன்னணி வீரரான கீ நிஷிகோரியை 6 3, 2 6, 6 2 என்ற செட்கணக்கில் ஜாக் சாக் வீழ்த்தினார்.


இறுதிச்சுற்றில் வெஸ்னினா பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீராங்கனையான எலினா வெஸ்னினா, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் பிரான்ஸ் வீராங்கனையான கிறிஸ்டினா மாடெனோ விக்கை வீழ்த்தினார். இறுதி ஆட்டத்தில் அவர் மற்றொரு ரஷ்ய வீராங்கனையான கஸ்னெட்சோவாவை எதிர்த்து ஆடவுள் ளார். நேற்று நடந்த மற்றொரு அரை யிறுதி ஆட்டத்தில் கஸ்னெட்சோவா, 7-6,7-6 என்ற செட்கணக்கில் கரோலினா பிளிஸ்கோவாவை போராடி வென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: