முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கம் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் பசுமை திட்டங்கள் செயலாக்க விழா

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      வேலூர்
Image Unavailable

நாச்சிப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் செங்கம் எக்ஸ்னோரா இணைந்து பசுமை திட்டங்கள் செயலாக்க கருத்தரங்கம் நடத்தப்பட்டது. கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் அக்ரி வெங்கடாசலபதி தலைமை தாங்கினார். பேராசிரியர் ரூபி வரவேற்று பேசினார். மாநில எக்ஸ்னோரா துணைத் தலைவர் திருவண்ணாமலை இந்திரராஜன் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கிவைத்தார் நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக சென்னை பம்பல் எக்ஸ்னோரா செனட்டர் இந்திரகுமார் கலந்துகொண்டு மழைநீர் சேகரிப்பு வீட்டுமாடியில் காய்கறி தோட்டம் இயற்கை உரம் தயாரிப்பு கழிவுநீர் சுத்திகரிப்பு மின்சேமிப்பு ஆகிய தலைப்புகளில் படவிளக்கங்களுடன் பேசினர். அப்போது மனிதன் உணவின்றி 21நாள் நீரின்றி 3நாள் இருக்கலாம் காற்றின்றி 2நிமிடம் இருக்கமுடியாது இன்று காற்று மாசுபடிந்துவிட்டது. பூமி வெப்பமயமாகி உள்ளது. தாவரங்கள் இறைவன் தந்தவரம் மனிதனின் வெப்பமும் இந்தியா குறிப்பாக தமிழக வெப்பநிலையும் ஒன்று எனவேதான் அனைத்து நாட்டுமக்களும் இங்குவாழ விரும்புகிறார்கள் உணவே மருந்தாகும் ஆனால் அது ரசாயனத்தால் கெட்டுபோய்விட்டது. பாரம்பரிய உணவு முறைகளுக்கு மாறவேண்டும் கடந்த 10 ஆண்டுகளில் விளை நிலங்கள் 3ல் ஒரு பங்காக குறைந்துவிட்டது. அழுதுகொண்டே உழுதுகொண்டிருக்கும் விவசாயிகள் உயர்ந்தவர்கள் வீடுகளில் பூசணிபோன்ற கொடிகளையாவது வளர்க்கவேண்டும். பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தகூடாது. குப்பைகளை எறிக்கக் கூaடாது மரு சூழற்சியில் உரமாக்கவேண்டும் என அவர் பேசினார். முடிவில் ஆன்மீக சொற்பொழிவாளரும் செங்கம் எக்ஸ்னோரா தலைவருமான தனஞ்செயன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை வாழ்த்தி ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி மாணிக்கம் நாச்சிப்பட்டு கூட்டுறவு வேளாண்மை கடன்சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் பார்த்தசாரதி ஆகியோர் பேசினர் நிகழ்சியில் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்கள் கரியமங்கலம் இராமமூர்த்தி மேல்செங்கம் குப்பன் மற்றும் சுமார் 60விவசாயிகள் கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்