முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரக்கோணம் நகரத்தில் மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டி

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      வேலூர்

மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி -2017, ஐந்து கட்டங்களாக அரக்கோணம் நகரத்தில் நடத்த திட்டமிட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரில் வேலூர் மாவட்ட இறகு பந்து கழக தலைவர் ஏ.காஜாமொய்தீன் மற்றும் செயலாளர் வழக்கறிஞர் எஸ்.எம்.ஜமாலுதீன் ஆகிய இருவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியுள்ளதாவது. பட்டியல் நெ.1 - 10 மற்றும் 13 வயது மாணவ, மாணவியர் பிரிவு ஒற்றையர், இரட்டையர் போட்டிகள் ஏப்ரல் 8 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் நடக்கிறது. இப்போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் பெயர் பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 6ந் தேதி ஆகும். பட்டியல் நெ.2 - 15 மற்றும் 17 வயது மாணவ, மாணவியர் பிரிவு ஒற்றையர், இரட்டையர் போட்டிகள் ஏப்ரல் 14 மற்றும் 15ஆகிய இரு தேதிகளில் நடக்கிறது. இப்போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் பெயர் பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 12ந் தேதி ஆகும். பட்டியல் நெ.3 - 17 மற்றும் 19 வயது மாணவ, மாணவியர் பிரிவு ஒற்றையர், இரட்டையர் போட்டிகள் ஏப்ரல் 15 மற்றும் 16 ஆகிய இரு தேதிகளில் நடக்கிறது. இப்போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் பெயர் பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 12ந் தேதி ஆகும். 40, 45 அதற்கு மேல் வயதுடைய ஆண்கள் இரட்டையர் பிரிவில் 29 மற்றும் 30ந் தேதி போட்டி. வெட்ரன்ஸ்; போட்டிகள் ஏப்30 மற்றும் மே முதல் தேதி இவ்விரு போட்டிகளில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் ஏப் 26ந் தேதி கடைசி நாள். போட்டிகள் அரக்கோணம் ( டிஎன்.நாராயணசாமி திருமண கூடம் சாலை ) ராயல் பேட்மிண்டன் உள்ளரங்கத்தில் நடைபெறும். தொடர்பு கொள்ள வேண்டியவர்கள் விவரம் செயலாளர் 98940 51610, திருப்பத்தூர் ஜான்-94434 03757, ஆம்பூர் தேவராஜ்- 94432 49622, வேலூர் முத்துபாண்டி- 98945 54076, மற்றும் விநாயகராமன்- 99946 89563, ராணிபேட்டை பழனி-97519 28842, குடியாத்தம் வெங்கடாசலம்- 93441 37424, மற்றும் விவேகானந்தன்- 95786 50048, அரக்கோணம் பாலசுந்தரம்- 97512 90735, போட்டி அமைப்பாளர்களாக குமரன், முகமதுரிஹான், மாலிக்ஜலால், ஆகியோர் நியமிக்கபட்டு உள்ளனர். இவ்வாறு பத்திரிகை செய்தியில் கூறியிருந்தன.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago