எஸ்.பி.பி - இளையராஜா மோதல் வியப்பூட்டுகிறது: வெங்கய்யா நாயுடு

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      சினிமா
SPB ilayaraja(N)

புதுடெல்லி  - எஸ்.பி.பி - இளையராஜா மோதல் வியப்பூட்டுகிறது என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சி, செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார். பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பாடியதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. இந்நிகழ்வு தமிழ் திரையுலகினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது தொடர்பாக நேற்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ''இளையராஜா பாடலை எஸ்.பி.பி. பாடுவதால் ஏற்பட்ட பிரச்சினை வியப்பூட்டுகிறது. இப்பிரச்சினை சுமுகமாக முடியும் என்று நம்புகிறேன்'' என தெரிவித்துள்ளார். இந்நிலையில் அண்ணன் இளையராஜாவின் செய்கைக்கு தம்பி கங்கை அமரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணனின் நடவடிக்கை முட்டாள் தனமானது என்றும் அவர் கோபமாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: