முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை மாவட்ட மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்: கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

ஆட்சியரகத்தில் திங்கள்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் கோபி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) குணசேகரன் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் சுயதொழில் கடனுதவி புதிய குடும்பஅட்டை வேலைவாய்ப்பு உள்ளிட்ட 860 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில் பெருமளவில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை கோரி அதிக மனுக்கள் குவிந்தன. மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு குறைதீர்வு கூட்டத்திலேயே உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 மாற்றத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்களையும் ஒருவருக்கு ஊன்றுகோளினையும் கலெக்டர் வழங்கினார். இந்நிலையில் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வடமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.பிரகாஷ் தலைமையில் 60 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் வடமாத்தூரில் நீர்நிலை பிடிப்பில் சுமார் 40 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். எனவே வீட்டு மனை பட்டா வழங்க வேண்டுமென்றும் இதேபோல திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆருத்திராப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் ஊரிலிருந்து வன்னிய நகர் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இங்கு பிரதான பைபாஸ் சாலையில் டாஸ்மாக் கடை இயங்கிவருகிறது. இதனை ஊருக்குள் கொண்டுவர டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த டாஸ்மாக் அமையவுள்ள பகுதியில் கோவில் மற்றும் பள்ளிகள் உள்ளது. எனவே எங்கள் கிராமத்தில் தொடங்கவுள்ள டாஸ்மாக் கடை வைக்க தடை விதிக்க வேண்டும் என்றும் மனு அளித்தனர். சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கிராம மக்கள் கடந்த 6 மாதமாக 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்கவில்லை என்றும், திருவண்ணாமலையை நகரை சேர்ந்த எஸ்.வடிவேல் என்பவர் செட்டித் தெருவில் பழமை வாய்ந்த பாரத விநாயகர் ஆலயம் உள்ளது. ஆலய வழிபாட்டுக்கு வருபவர்கள் ஆலயத்தை சுற்றிவரவும் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் போக ஒரு பாதை திரும்பிவர ஒரு பாதையாக உபயோகத்தில் இருப்பதை மேற்படி ஆலய இடதுபுற ரோடு நகராட்சி புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து தகரத்தால் செய்யப்பட்ட பங்க் கடை வைத்து ஆடு கோழி இறைச்சி கடை வைத்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு கடையை அகற்ற வேண்டும் எனவும் மனு அளித்தனர். மனுவினை பெற்றுக் கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago