முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏப்ரல் 1-ந் தேதி முதல் ‘ஸ்மார்ட்’ ரே‌ஷன் கார்டு வினியோகம்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஸ்மார்ட் கார்டு திட்டத்தை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 1-ந் தேதி முதல் சென்னை மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள பழைய ரே‌ஷன் கார்டு முறைகளை மாற்றி ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. ரே‌ஷன் பொருட்கள் வினியோகத்தில் முறைகேடுகளை தடுக்க ஸ்மார்ட் கார்டு திட்டம் கை கொடுக்கும் என்று நம்புகிறது.ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்காக ஆதார் எண், மொபைல் எண் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் நவீன கருவியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2கோடி ரே‌ஷன் கார்டுகள் தற்போது புழக்கத்தில் உள்ளன. இவற்றில் ஒரு கோடியே 40 லட்சம் ரே‌ஷன் கார்டுகளுக்கு ஆதார் எண் உள்ளிட்ட முழுவிவரமும் பெறப்பட்டுள்ளது. அதனால் ஸ்மார்ட் கார்டு திட்டத்தை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 1-ந் தேதி முதல் சென்னை மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. ஆதார் எண் விவரங்கள் தராதவர்களிடம் படிப்படியாக பெறப்பட்டு புதிய ஸ்மார்ட் கார்டு பின்னர் வினியோகிக்கப்படும்.

இது குறித்து உணவு வழங்கல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான இறுதி கட்டப் பணிகள் நிறைவடைய உள்ளன. தினமும் 10 லட்சம் கார்டுகள் அச்சடிக்கப்படும் பணி வருகிற 28-ந் தேதி நிறைவடையும். அச்சிடப்பட்ட கார்டுகள் சென்னையை தவிர பிற மாவட்டங்களுக்கு 29,30-ந் தேதிகளில் அனுப்பப்படுகிறது. அங்கிருந்து 31-ந் தேதி சம்பந்தப்பட்ட ரே‌ஷன் கடைகளுக்கு அனுப்பப்படும். ஏப்ரல் 1-ந் தேதி ரே‌ஷன் கடைகளுக்கு அருகே உள்ள பள்ளி, சமூக நலக்கூடங்களுக்கு மக்களை வரவழைத்து ஸ்மார்ட் கார்டுகள் இலவசமாக வழங்கப்படும். சென்னையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்ததும் கார்டுகள் வினியோகிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் 5 வகைகளில் தயாரிக்கப்படுகிறது. கார்டில் புகைப்படம் அருகில் பி.எச்.எச்- ரைஸ் என்று இருந்தால் அனைத்து பொருட்களும், பி.எச்.எச். - ஏ என்று இருந்தால் 35 கிலோ அரிசி உட்பட அனைத்து பொருட்களும் தரப்படும். என்.பி.எச்.எச். என மட்டும் இருந்தால் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும், என்.பி.எச்.எச் - எஸ் என இருந்தால் சர்க்கரை வழங்கப்படும் என்.பி.எச்.எச்.- என்.சி என இருந்தால் எந்த பொருட்களும் கிடைக்காது. ஸ்மார்ட் கார்டு ‘பான் கார்டு’ வடிவில் அதன் முதல் பக்கத்தின் மேல் பகுதியில் அரசு முத்திரையுடன் “உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை” என அச்சிடப்பட்டிருக்கும் அதற்கு கீழ் குடும்பத்தலைவர் பெயர், பிறந்ததேதி, புகைப்படம் குறியீட்டு எண், முகவரி போன்றவை இடம் பெறும். பின்பக்கத்தில் உறுப்பினர்கள் பெயர், ரே‌ஷன் கடை எண், ஆண்டு மற்றும் கியூ. ஆர் என்ற ரகசிய குறியீடு இருக்கும் கார்டின் கீழ் பகுதியில் இந்த கார்டை முகவரிக்காக பயன்படுத்த கூடாது என எழுதப்பட்டிருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago