முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொக்கிக்கல்லு, பாண்டியன் கொட்டாய், வேடம்பட்டி பகுதிகளில் ரூ. 60.42 லட்சம் மதிப்பில் தார்சாலை மற்றும் சாலை விரிவாக்கும் பணிகள்: அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      தர்மபுரி

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நம்மாண்டஅள்ளி சாலை முதல் கொக்கிக்கல்லு சாலை வரை 830 மீட்டர் தூரத்தில் ரூ. 26 இலட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியினை பூமி பூஜை செய்து தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் காரிமங்கலம் வட்டம், பொம்மஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் முதல் பாண்டியன் கொட்டாய் வரை 960 மீட்டர் வரை ரூ. 17.92 இலட்சம் மதிப்பில் தார்சாலையையும் மற்றும் கும்மனூர் ஊராட்சிக்குட்பட்ட வேடம்பட்டி கிராமத்தில் ரூ. 16.50 இலட்சம் மதிப்பில் தார்சாலை விரிவாக்கும் பணி என மொத்தம் ரூ. 60.42 இலட்சம் மதிப்பில் தார்சாலை மற்றும் சாலை விரிவாக்கும் பணிகளுக்கு பூமி பூஜை செய்து திட்ட பணிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் இப்பணியினை தொடங்கி வைத்தார். பின்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:-நமது மாவட்;டம், பாலக்கோடு மற்றும் பொம்மஅள்ளி ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளாக தார்சாலை அமைத்து தர வேண்டி வலியுறுத்தி வந்தனர். இதற்காக அம்மாவின் அரசானது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை ஏற்று உடனடியாக தார்சாலை அமைப்பதற்கு ஆணை பிறப்பித்து இத்திட்டத்தை பொதுமக்கள் பயனடையும் வகையில் ரூ. 43.92 இலட்சம் மதிப்பில் தார்சாலை பணி நிறைவேற்றி தரப்பட்டுள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காளிதாசன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. சண்முகசுந்தரம், தனித்துணை கலெக்டர் (கலால்) மல்லிகா, வட்டாட்சியர்கள் அதியமான், கண்ணன், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.வி. அரங்கநாதன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் வீரமணி, கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத் தலைவர் எம். பழனிசாமி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தொ.மு. நாகராஜன், முன்னாள் பாலக்கோடு ஒன்றியக்குழுத் தலைவர் கோபால் உட்பட துறை ரீதியான அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்