முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர்; சி.கதிரவன் தலைமையில் (20.03.2017 ) நடைபெற்றது. இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் குடிநீர் வசதி, மின்வசதி, பட்டா வேண்டியும், கல்வி உதவித் தொகை, ஓய்வூதியத் தொகை, இலவச தையல் எந்திரம், சலவைப் பெட்டி, வேலை வேண்டியும் மற்றும் சாலை வசதி வேண்டியும், மின் இணைப்;பு, வீட்டுமனைப்பட்டா, பல்வேறு கோரிக்கைகள் உள்ளிட்ட மொத்தம் 287 - மனுக்களும் , மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 4- மனுக்களும் ஆக மொத்தம் 291- மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார். முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பாக வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு ஊருவாக்கும் திட்டத்தின் கீழ் சுய தொழில்கள் செய்ய ஊத்தங்கரை வட்டம் காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு ரூ. 15000- ஆயிரத்திற்கான காசோலையும், கிருஷ்ணகிரி வட்டம் தளிஅள்ளி கிராமத்தை சேர்ந்த குமார் என்பவருக்கு ரூ. 5000 -- க்கான காசோலையையும், ஜீனூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்ற குழந்தைக்கு ரூ.2750 மதப்பிலான செயற்கை கால்கள் என மொத்தம் ரூ.22 ஆயிரத்து 750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சூ.கிருஷ்டி, கலெக்டர் நேர் முக உதவியாளர் (பொ) த.சாந்தி, உதவி ஆணையர் ( ஆயம்) முருகேசன், தனி துணை கலெக்டர் (பொறுப்பு) (சமூக பாதுகாப்பு திட்டம்) ரகு குமார், மாவட்டவழங்கல் அலுவலர் குமரேசன், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago